அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச சபையின், அரபா நகர் - கொக்குலான் கல் பகுதியின் ஒரு பார்வை…! - Sri Lanka Muslim

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச சபையின், அரபா நகர் – கொக்குலான் கல் பகுதியின் ஒரு பார்வை…!

Contributors

-பாறுக் ஷிஹான்-

பாம்பு தொல்லையுடன், அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத (குடிநீர் மின்சார வசதி) அரபா நகர், கொக்குலான் கல் மக்களின் நிலையே இது.

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் உள்ள அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத (குடிநீர் மின்சார வசதி) அரபா நகர் கொக்குலான் கல் மக்கள் எதிர்நோக்கின்ற பிரச்சினைகள் சொல்லிலடங்காதவை.

சுமார் 65 குடும்பங்கள் உள்ள மேற்குறித்த கிராமங்களில் குடியேறியுள்ள மக்கள் கட்டங்கட்டமாக 5 வருடங்களுக்கு முன்னர் குடியேறியவர்களாவர்.

இப்பகுதி மக்களுக்கு மலசல கூட வசதி, மின்சார வசதி,வீதி அபிவிருத்தி, தெருவிளக்கு, மாலை வேளைகளில் உள்ள பாம்பு தொல்லை, யானைகளின் அட்டகாசம் என பல்வேறு வகையான பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய அவசியமாக உள்ளதை காண முடிந்தது.

எனவே பொறுப்பு வாய்ந்தவர்கள் அனைவரும் இது தொடர்பில் கரிசனை செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team