அம்பாறை மாவட்டம் பொத்துவில் செங்காமம் பகுதியில் கிணறுகளின் நீர் நிலை - Sri Lanka Muslim

அம்பாறை மாவட்டம் பொத்துவில் செங்காமம் பகுதியில் கிணறுகளின் நீர் நிலை

Contributors
author image

A.M.தாஜகான்- Pottuvil (M.A. M.ED)

அம்பாறை மாவட்டம் பொத்துவில் செங்காமம் பகுதியில் கிணறுகளின் நீர் நிலை வற்றிக்காணப்படுவதால் அப்பகுதி வாழ் மக்கள் பெரும் கஸ்டத்தை எதிர் நோக்கி வருகின்றார்கள்.

 
பொத்துவிலில் கடும் வரட்சியான கால நிலை நிலவி வருவதனால் பல கிணறுகளின் நீர் நிலை வற்றியுள்து. குறிப்பாக செங்காமம் எனும் குக்கிராமம் மேட்டுப்பகுதியில் அமைந்துள்ளதால் கிணறுகளின் நீர் வற்றியுள்ளது.

 

இப்பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிப்படைகின்றார்கள். மேலும் அன்றாட தேவைக்கான நீரினை பெற முடியாமல் அல்லல் படுகின்றார்கள். தவிக்கும் மக்களுக்கான நீரினை வழங்க சமூக நிறுவனம் முன் வருமா?

Web Design by Srilanka Muslims Web Team