அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து போட்டி - முன்னாள் பியசேன எம்.பி » Sri Lanka Muslim

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து போட்டி – முன்னாள் பியசேன எம்.பி

piya

Contributors
author image

பைஷல் இஸ்மாயில்

அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து போட்டியிடும் என முன்னாள் அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளருமான பீ.எச்.பியசேன தெரிவித்தார்.

அம்பாறை, தமன பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பெண்களுக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தமன பிரதேசத்தில் நேற்று (06) இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலுள்ள சில இடங்களில் தனித்து போட்டியிடும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தனித்து போட்டியிடுகின்ற பொத்துவில் தொகுதிக்கான வேட்பு மனுக்களை நேற்று முன்தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொது செயலாளர் சட்டத்தரணி சகால காரியவசம் தலைமையின் கீழ் தாக்கல் செய்துள்ளோம்.

அக்கரைப்பற்று மாநகர நபை மற்றும் பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை போன்ற சபைகளுக்கான வேட்பு மனுக்களே இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka