அம்பாறை மாவட்ட பாடசாலைகளில் மாணவர் அனுமதிக்கு பணம் அறவிடும் செயற்பாடு. பெற்றோர் விசனம். - Sri Lanka Muslim

அம்பாறை மாவட்ட பாடசாலைகளில் மாணவர் அனுமதிக்கு பணம் அறவிடும் செயற்பாடு. பெற்றோர் விசனம்.

Contributors

-கிழக்கு நிருபர்-
அம்பாறை மாவட்ட அரச பாடசாலைகளில் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டுக்கு முதலாம்
தரத்திற்குப் புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கு பணம் மற்றும் நன்கொடைகளை அறவிடும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர் . இதனால் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு சேர்ப்பதில் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர் .
பாடசாலைகளின் உள்ளக பௌதீக அபிவிருத்தி மற்றும் கற்றல் கற்பித்தல் சாதனக் கொள்வனவு முதலானவற்றுக்கு அரசாங்கம் வருடாந்தம் நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வரும் நிலையில் பாடசாலைகளின் தேவை மற்றும் அபிவிருத்தி என்பதாகத் தெரிவித்து நிதி வசூலிக்கப்படுவதாகவும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் .
இதனால் மாணவர்களை அனுமதிப்பதற்கு ஆயிரம் ரூபா தொடக்கம் இருபத்தையாயிரம் ரூபாய் வரை பெற்றோர் செலுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது .
பெற்றோர்களிடம் இப்பணத்தை அறவிடுவதற்கு சில பாடசாலைகளில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பாடசாலை மேம்பாட்டுக்குழு , பழைய மாணவர்கள் சங்கம் தொடர்புடைய குழுவினர் ஆகியோர் ஈடுபட்டு வருவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர் .

Web Design by Srilanka Muslims Web Team