அர­சாங்­கத்­துக்கு வால்­பி­டிக்க, கூஜா தூக்க வேண்­டு­மென்றால் அதை என்­னாலும் நன்­றாகச் செய்ய முடியும் - அமைச்சர் ஹக்கீம் - Sri Lanka Muslim

அர­சாங்­கத்­துக்கு வால்­பி­டிக்க, கூஜா தூக்க வேண்­டு­மென்றால் அதை என்­னாலும் நன்­றாகச் செய்ய முடியும் – அமைச்சர் ஹக்கீம்

Contributors
author image

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

அர­சாங்­கத்­துக்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை பெற்றுக் கொடுத்து அமை ச்சுப் பத­வி­க­ளையும் வகிக்கும் நாம் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் விரோ­தி­க­ளாக பார்க்­கப்­படும் நிலை­மைக்கு இன்று தள்­ளப்­பட்­டுள்ளோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிஸின் தேசி­யத்­த­லை­வரும் நீதி­ய­மைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

 

முஸ்லிம் காங்­கி­ரஸின் திரு­கோ­ண­மலை மாவட்ட கிளை திறப்பு விழா எம்.எஸ். தெளபீக் எம். பி தலை­மையில் சின்­னக்­கிண்­ணி­யாவில் கடந்த 03ஆம் திகதி புதன்­கிழமை நடை­பெற்­றது. அந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

 

அர­சாங்­கத்­துக்கு வால்­பி­டிக்க, கூஜா தூக்க வேண்­டு­மென்றால் அதை என்­னாலும் நன்­றாகச் செய்ய முடியும். அப்­படி நாம் நடந் தால் முஸ்லிம் காங்­கிரஸ் சூடு, சுரணை­யற்ற கட்சியென போரா­ளிகள் எம்­மைச்­சா­டு­வார்கள். சாஸ்­டாங்­க­மாக விழுந்து ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு சேவகம் செய்ய வேண்­டு­மென்ற அவ­சியம் எமக்­கில்லை. அந்த இழி­நி­லைக்கு எமது கட்­சியின் போரா­ளி­களை கொண்டு போய்­விடும் கேவ­லத்தை முஸ்லிம் காங்­கிரஸ் ஒரு போதும் செய்­யாது.

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைமை எப்­பொ­ழு­துமே உண்­மையை எடுத்­துக்­கூ­று­வ­தற்கு தயங்­கு­வ­தில்லை. நாம் வேறு யாரு­டைய தய­விலும் தங்­கி­யில்­லாத கட்­சி­யென்­ப­தனால் உண்­மை­களை இடித்­து­ரைக்க பயப்­ப­டு­வ­தில்லை.

 

இன்று அட்­ட­கா­ச­மான மேலா­திக்­கப்­போக்கு ஆபத்­தா­னது என்ற விட­யத்தை அர­சாங்­கத்­துக்கு எடுத்­துக்­கூற வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதற்­காக எங்­களை விரோ­தி­க­ளா­கப்­பார்க்க வேண்­டா­மென்று கேட்­டுக்­கொள்­கிறோம். நாம் கூட­வி­ருந்து குழி­ப­றிக்கும் வேலையை பார்க்­க­மாட்­டோ­மென கூறிக்­கொள்­கிறேன்.

 

யுத்­தத்­துக்குப் பின்­ன­ரான வித்­தி­யா­ச­மான கட்­டத்தில் நாம் இருந்து கொண்­டி­ருக்­கிறோம். அடுத்த கட்ட தேசிய மட்ட தேர்தல் வரு­கின்­ற­போது வேறு எந்­தக்­கட்­சியும் எங்­க­ளைப்போல் கஷ்­டப்­ப­டப்­போ­வ­தில்லை. நாங்கள் எடுக்கும் முடி­வுதான் ஒரு சிக்­க­லான முடி­வாக இருக்கும். சந்தர்ப்பம் வரு­கின்ற போது முறை­யான பேச்­சு­வார்த்­தையை நடத்தி முடிவு எடுக்க வேண்டும். இதில் நாம் அவ­ச­ரப்­ப­டு­வ­தற்கு இட­மில் லை.

 

ஆனால், தற்­போது சில பேர் அவ­ச­ரப்­பட்டு அறிக்கை விடு­கி­றார்கள். எமது கட்­சியில் பதவி வழி­யாக அந்­தஸ்தில் உள்­ள­வர்கள், அதி­கார வழி­யாக அந்­தஸ்து வந்­த­வர்கள் இதுதான் மார்க்கம், இதுதான் வழி­யென இப்­பொ­ழுதே தீர்­மா­னத்தை அறி­வித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். தலைமை சரி­யான நேரம் வரு­கிற போது சரி­யான முடிவை எடுக்கும் என்­பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, எதேச்­சை­யாக அறி­விப்­புக்­களை செய்ய முனை­வது கட்­சியின் கட்­டுப்­பாட்டை மீறும் செய­லாகும்.

 

கிழக்கு மாகா­ணத்தில் இனப்­ப­ரம்­பலை மாற்­று­வ­தற்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதன் வெளிப்­பாட்டை அம்­பாறை மற்றும் சேரு­வில தொகு­தி­களில் நேர­டி­யா­கவே காணலாம். வடக்­கிலும் இவை கன­தி­யாக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அநீ­திகள் நடை­பெ­று­கின்ற போது அதை தட்­டிக்­கேட்­க­வில்­லை­யாயின் முது­கெ­லும்­பற்ற முஸ்­லிம்­காங்­கிரஸ் என எமது கட்­சியின் போரா­ளிகள் எம்மை சாடு­வார்கள்.

 

சிறு விட­யங்­க­ளைக்­கூட விட்­டுக்­கொ­டுக்­காத அரசின் பிடி­வா­தப்­போக்­கினால் புரிந்­து­ணர்வும் நல்­லி­ணக்­கமும் சீர்­கெட்டு விடுமோ என மக்கள் அச்சம் கொள்­கி­றார்கள். எங்கள் மீது திணிக்­கப்­படும் பலாத்­கா­ரத்­துக்கு எதி­ராக அல்­லது மாறாக நடப்­ப­தற்கு முஸ்லிம் காங்­கி­ர­ஸினால் முடி­ய­வில்­லை­யென்றால் நாங்கள் இந்த ஆட்­சியின் பங்­கா­ள­ராக இருப்­பதில் அர்த்­த­மில்லை.

 

இந்த அர­சாங்­கத்­துடன் முஸ்லிம் காங்­கிரஸ் தொடர்ந்தும் இருக்க வேண்­டுமா? என எல்­லோ­ராலும் கேட்­கப்­படும் கேள்­வி­யாக இருக்­கி­றது. காங்­கிரஸ் யாரு­டைய எடுப்பார் கை பிள்­ளை­யு­மில்லை, யாருக்கும் ஜென்ம விரோத கட்­சி­யு­மில்­லை­யென்­பதை எல்­லோரும் புரிந்து கொள்ள வேண்டும். சமூ­கத்தின் அபி­லா­சை­களை சுமந்து கொண்­டி­ருக்­கின்ற இயக்­கமே முஸ்லிம் காங்­கிரஸ் என்­பதை ஒவ்­வொ­ரு­வரும் புரிந்து கொள்ள வேண்டும்.

 

அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளியில் வரவும் எமக்­குத்­தெ­ரியும். வெளியில் வரும்­போது மற்­ற­வர்­களை படு­கு­ழியில் தள்­ளி­விட்­டு­வ­ரவும் எமக்­குத்­தெ­ரியும்.

 

முஸ்லிம் காங்­கிரஸ் நிறைய சோத­னை­க­ளையும் வேத­னை­க­ளையும் சந்­தித்­தி­ருக்­கி­றது. கட்­சியின் வீரியம் இன்னும் குன்றிப் போய்­வி­ட­வில்லை. இக்­கட்­சியின் போரா­ளிகள் ஆவே­ச­மா­கவும் ஆத்­திரம் கொண்­ட­வர்­க­ளாக காணப்­ப­டு­கி­ற­போதும் தலை­மைப்­பீடம் தார்­மீ­க­மான தீர்க்க தரி­ச­னத்­துடன் முடிவு எடுக்கும் என பொறுமை காத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்கள் என்றே சொல்ல வேண்டும். எங்­க­ளுக்கு விடிவு வரு­வ­தற்கு முஸ்லிம் காங்­கிரஸ் என்னும் இயக்கம் சரி­யான வியூகம் வகுக்­கு­மென அவர்கள் நம்­பிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள்.

 

எது எவ்­வா­றா­யினும் கட்­சியின் கட்­டுக்­கோப்பை பாது­காக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. ஒரு சிலர் கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாது தான் தோன்றித்தனமாக நடந்து கொள்கிறார்கள். மாகாண அமைச்சர்கள் இக்கூட்டத்தில் இன்று கலந்து கொள்ளாதுள்ளனர்.

 

மெள­லவி ஹஸனது அனு­தா­பக்­ கூட்­டத் தில் கூட கட்­சியின் மாகாண அமைச்­சர்கள் கலந்து கொள்­ள­வில்லை. இது மிகவும் வேதனை தரும் விட­ய­மாகும். இத்­த­கை­ய­வர்­க­ளுக்கு கட்சி ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு ஒரு­போதும் பின் நிற்­காது என்று இச்­சந்­தர்ப்­பத்­தில்­ கூ­றிக்­கொள்ள விரும்­பு­கின்றேன் என்றார்     (நன்றி சித்திக் காரியப்பர்)

Web Design by Srilanka Muslims Web Team