அர­சாங்கம் ஒருதலைப்­பட்­ச­மான தீர்­வினைத் திணிக்க முயற்­சிக்கின்றது! - Sri Lanka Muslim

அர­சாங்கம் ஒருதலைப்­பட்­ச­மான தீர்­வினைத் திணிக்க முயற்­சிக்கின்றது!

Contributors

பாராளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் ஊடாக அர­சாங்கம் ஒருதலைப்­பட்­ச­மான தீர்­வினைத் திணிக்க முயற்­சிக்­கி­ற­தென்றும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னதும் முஸ்லிம் காங்­கி­ர­ஸி­னதும் பங்­கு­பற்­று­த­லின்றி எட்­டப்­படும் எந்த முடி­வு­களும் தேசியப் பிரச்­சி­னைக்குத் தீர்வாக அமையப் போவதில்லை என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லா­ளரும் எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்துள்ளார் .

இவ்­வா­றான தீர்­மா­னங்கள் தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னைக்கு உதவப் போவ­தில்லை எனவும் குற்­றஞ்­சாட்­டியுள்ளார் இது தொடர்பில் கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் வார இதழொன்றுக்கு அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில், தேசியப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­கென தற்­போது அமைக்­கப்­பட்­டுள்ள பாராளு ­மன்றத் தெரிவுக்குழுவில் ஒத்த கருத்தைக் கொண்­ட­வர்கள் மட்­டுமே இடம்­பெற்­றுள்­ளனர்.

இவர்கள் ஊடாக தீர்வுகளைக் கண்டு அத­னையே தேசியப் பிரச்­சி­னையின் சிபார்­சு­க­ளாக முன்­வைக்க அரசு முயற்­சிக்­கி­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னதும் முஸ்லிம் காங்­கி­ர­ஸி­னதும் பங்­கு­பற்­று­த­லின்றி பாராளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வினால் எட்­டப்­படும் எந்த முடி­வு­களும் தேசியப் பிரச்­சி­னைக்குத் தீர்­வாக ஒரு­போதும் அமையப் போவ­தில்லை.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை இக் குழுவில் அங்கம் பெறு­மாறு அர­சாங்கம் அழைப்பு விடுத்­துள்ள நிலையில் அதனை ஏற்றுக் கொண்டு அக் கட்சி பங்­கேற்­றாலும் அதன் சிபார்­சுகள், கருத்­துகள் பாராளுமன்றத் தெரி­வுக்­கு­ழுவின் இறுதி வடி­வத்தில் உள்­ள­டக்­கப்­ப­டுமா என்­பது கூட சந்­தே­க­மா­க­வே­யுள்­ளது.

ஏனெனில், மாற்றுக் கருத்­துக்­களைக் கொண்ட எவ­ரையும் இந்த பாராளு­மன்றக் குழுவில் உள்­வாங்கும் மனப்­பாங்கு அர­சாங்­கத்­திடம் இல்லை. மாற்றுக் கருத்­துக்­க­ளையும் உள்­வாங்கும் மன நிலை அரசாங்கத்­திடம் இருந்­தி­ருந்தால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸையும் அமைச்சர் திஸ்ஸ விதா­ர­ண­வையும் அந்தக் குழுவில் அர­சாங்கம் இணைத்திருக்க வேண்டும்.

இவ்வாறானதொரு நிலையில் ஒருதலைப்பட்சமான தீர்வுகளையே அரசாங்கம் முன்வைக்க முயற்சிக்கிறது. இதனை எமது கட்சி ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team