அரசாங்கத்திடம் தவறுகள் உள்ளன - விமல் ஒப்புதல் வாக்குமூலம்..! - Sri Lanka Muslim

அரசாங்கத்திடம் தவறுகள் உள்ளன – விமல் ஒப்புதல் வாக்குமூலம்..!

Contributors

கடந்த காலங்களில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டங்களின் போது தான் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தவறான முறையில் சித்தரிக்கப்பட்டு வெளியாவதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைச்சர் விமல் வீரவங்ச இவ்வாறு குறி்பபிட்டுள்ளார்.

பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஆட்சி பீடத்தை வழங்கினார்கள். ஆனால் மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்பதை விட எதிர்பார்க்காத பல்வேறு விடயங்களை அரசாங்கம் செய்ய முயன்றதன் காரணமாகவே இன்று அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாட்டுக்கு தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது கூட யோசனையொன்று முன்வைக்கப்பட்டு ஒரே நாளில் நிறைவேற்றப்படுகிறது. ஒரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டு அதனூடாக தீர்மானங்களை மேற்கொள்வதே நாட்டின் நிலையான கொள்கையை வலுப்படுத்தும் எனவும் அமைச்சர் விமல் வீரவங்ச தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.


அமைச்சர் விமல் வீரவங்ச வெளியிட்ட அறிக்கையின் முழுமையான தொகுப்பு இதோ!

Web Design by Srilanka Muslims Web Team