அரசாங்கத்தினால் ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து, அபாய எச்சரிக்கை செய்யும் எதிர்க்கட்சி..! - Sri Lanka Muslim

அரசாங்கத்தினால் ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து, அபாய எச்சரிக்கை செய்யும் எதிர்க்கட்சி..!

Contributors

கொழும்பு பொது அஞ்சல் அலுவலகம், வெளிவிவகார அமைச்சக கட்டிடம் மற்றும் இடம் என்பவற்றை விற்க அரசு தயாராக உள்ளது என்கிறார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பான தனது உத்தியோக பூர்வ வலையொலியில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவைகள் தாய்நாடு என்று மார் தட்டிக் கொள்ளும் போது இது நடக்கும் என்று யார் நினைத்திருப்பார்கள்? இந்த போலி தேசபக்தி அரசாங்கம் வெளியுறவு அமைச்சக கட்டிடம் மற்றும் இடம், கொழும்பு பொது தபால் அலுவலகம், கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டல், யார்க் கட்டிடம், கபூர் கட்டிடம், தாமரை கோபுரத்தை சுற்றியுள்ள இடங்கள், கொழும்பு ஹில்டன் ஹோட்டல் மற்றும் கிரைண்ட் ஹையாட் கட்டிடம் ஆகியவற்றை விற்பதற்கான அமைச்சரவை அனுமதியை இன்று வரை பெற்றுள்ளது.

இந்த நிலங்கள் கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் உள்ளன. எனவே, ஒரு நாடு என்ற வகையில், கொழும்பு துறைமுக நகரத்திற்காக ஏற்றுக்கொள்ள முடியாத சட்டங்களை அறியாத முதலீட்டாளர்கள் என்று அழைக்கப்படும் ஒரு குழுவிற்கு இந்த வளங்கள் எந்த வெளிப்படைத்தன்மையுமின்றி விற்கப்படுகிறதா என்று நாம் விளிப்பாக கேள்வி எழுப்ப வேண்டும்.

மறுபுறம், நாட்டில் ஒரு அங்குல நிலத்தை விற்க மாட்டேன் என்று கூறும் கவனிப்பு அரசாங்கம், எந்தவொரு கொள்கையும் இல்லாமல் ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய மதிப்புமிக்க நிலங்களை விற்கப் போகிறது என்பதற்கு யாருடைய தேவையின் நிமித்தம் என்று கண்களைத் திறந்து நோக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team