அரசாங்கத்தின் எரிபொருட்களின் விலைக்குறைப்பு மூலம் ஊவா மாகாண சபையை கைப்பற்றும் வியூகம் -ஏ.எச்.எச்.எம். நபார் - Sri Lanka Muslim

அரசாங்கத்தின் எரிபொருட்களின் விலைக்குறைப்பு மூலம் ஊவா மாகாண சபையை கைப்பற்றும் வியூகம் -ஏ.எச்.எச்.எம். நபார்

Contributors
author image

S.Ashraff Khan

அரசாங்கத்தின் எரிபொருட்களின் விலைக்குறைப்பு, மின்சாரக்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளமை மூலம் ஊவா மாகாண சபையை கைப்பற்றும் வியூகம் வெற்றியளிக்கப்போவதில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின்  கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம். நபார் குறிப்பிட்டார்.

 

ஊவா தேர்தல் இறுதிக்கள நிலவரம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடும்போது,

 

இன்றைய ஊவா தேர்தல் களத்தில் பதுளை, மொனராகலை மாவட்டங்களில் அரசினுடைய ஜனாதிபதி தொடக்கம் அமைச்சர்கள் எல்லாம் சூறாவழிப்பிரச்சாரம் செய்துகொண்டிருக்கின்றார்கள். ஆனால் பதுளை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஐக்கிய தேசியக் கட்சியினுடைய நிருவாகிகள் பாராளுமன்ற, மாகாண சபை, உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளும் செய்து வருகின்றோம். இக்கால கட்டத்தில் பதுளை மக்கள் பெரும் சக்தியாக இன்று ஐக்கிய தேசியக்கட்சியை ஆதரிக்க முன்வந்து கொண்டிருக்கின்ற நிலையில் நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. என்பதை குறிப்பிடுவதோடு, இது எதிர்கால ஆட்சி மாற்றத்திற்கான அறை கூவலாக மக்களுக்கு விடுக்கப்படுகின்றன்றது.

 

தோட்டத் தொழிலாளர்களினுடைய ஐக்கிய தேசியக்கட்சிக்கான ஆதரவு மிகவும் உச்ச மட்டத்தில் உள்ளமை இங்கு குறிப்பிட்டுக் கூறவேண்டிய ஒன்றாகும்.
பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அதனை இராஜினாமா செய்துவிட்டு தமிழர் ஒருவரான வேலாயுதம் என்ற தோட்டத்தொழிலாளர் சார் ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்புரைிமையினை கொடுத்துவிட்டதன் ஊடாக தமிழ் மக்களுடைய உள்ளங்களில் ஐக்கிய தேசியக் கட்சியினுடைய நம்பிக்கை, உறுதித்தன்மை வளர்ந்திருப்பதன் காரணமாகவும், தோட்டத் தொழிலாளர்களினுடைய வாக்குகளின் எண்ணிக்கை இம்முறை தேர்தலில் அதிகரிக்கும்.

 

எனவேதான் இந்த ஊவா தேர்தலை ஆட்சிமாற்றத்திற்கான ஒரு சமிக்ஞையாக மக்கள் எடுத்தக்கொள்ள வேண்டும்.

 

அரசாங்கம் இன்று பல்வேறு திட்டங்களுடன் களமிறங்கி இருந்தாலும் மக்கள் மனங்களில் குடியிருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியும், அதன் ஊவா மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளருமான ஹரீன் பெர்ணான்டோவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

 

 என்று துடித்துக் கொண்டிருக்கின்ற இலங்கை வாழ் மக்களுக்காக அரிய சந்தர்ப்பமாக இந்த ஊவா தேர்தலை அப்பிரதேச மக்கள் பயன்படுத்திக் கொள்ள முன்வருவதன் ஊடாக ஆட்சி மாற்றத்திற்கான அறை கூவலை விடுக்க மக்கள் தயாராகுமாறு வேண்டுகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

Web Design by Srilanka Muslims Web Team