அரசாங்கத்தின் கிண்ணியா பிரதேச சபை வரவு - செலவுத் திட்டமும் தோல்வி - Sri Lanka Muslim

அரசாங்கத்தின் கிண்ணியா பிரதேச சபை வரவு – செலவுத் திட்டமும் தோல்வி

Contributors

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள கிண்ணியா பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எல்.எம்.ஜவாத்துல்லாஹ்வினால் இன்று (12) வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.

திட்டம் ஐந்து மேலதிக வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளது.

இந்த வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக பிரதேச சபை உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்கவில்லை. எனினும் எதிராக ஐந்து உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதனால் எதிர்வரும் டிசம்பர் 19ம் திகதி வரவு செலவுத் திட்டம் மீண்டும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதேச சபை செயலாளர் தெரிவித்தார்.

(ad – நிருபர்)

Web Design by Srilanka Muslims Web Team