அரசாங்கத்தின் பகுத்தறிவற்ற செயல், படுகுழிக்குள் தள்ளப்படும் நாடு..! - Sri Lanka Muslim

அரசாங்கத்தின் பகுத்தறிவற்ற செயல், படுகுழிக்குள் தள்ளப்படும் நாடு..!

Contributors

அரசாங்கத்தின் பகுத்தறிவற்ற மற்றும் நடைமுறைக்கு மாறான முடிவுகளை எதிர்கொண்டு நாடு நாளுக்கு நாள் படுகுழியில் மூழ்கி வருகிறது. புலமைத்துவ பாதையில் நாட்டை அழைத்துச் செல்லுவதாக கூறி அரசாங்கம், தற்போதைய ஆட்சியாளர்கள் எடுக்கும் முடிவுகள் வெறும் முழக்கங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

காபனிக் உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தமை இதன் உடனடி முடிவாக இருந்து. இந்த முடிவு நாட்டின் பொருளாதாரத்தை பெரும் ஆபத்தில் ஆழ்த்தி, மக்கள் ஜீவனோபாய அரிசியைக் கூட இழக்கும் நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும்அந்த அறிக்கையில்,

உலகில் எந்த நாடும் காபனிக் உரங்களை மட்டுமே பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. அவ்வாறு செய்யும் எந்த நாடுகள் இருப்பின் அத்தகைய நாடுகளை அம்பலப்படுத்துமாறு நாங்கள் அரசாங்கத்திற்கு சவால் விடுகிறோம்.

சில நாடுகள் ஒரு குறிப்பிட்ட சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய காபனிக் உரங்களைப் பயன்படுத்துகின்றன. இலங்கையில் நெற் செய்கை, தேயிலை, உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி செய்கை என்பன ஏற்கனவே நெருக்கடியில் உள்ளன.

சரியான திட்டமிடலுக்குப் பிறகுதான் காபனிக் உரங்களைப் பயன்படுத்த நாம் செல்ல வேண்டும். அது வெறும் அரசியல் முழக்கமாக இருக்கக்கூடாது.

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரத்தை நிர்வகிக்க இயலாமையில் எழுந்துள்ள அந்நிய செலாவணி பிரச்சினைக்கு மாற்றாக இறக்குமதி தடை ஏற்படுத்திய காபனிக் உரங்களின் கதையும் இறுதியில் சீனாவுக்கு ஒரு பொறியாக மாறியுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது? சிக்கலை எழுப்புகிறது.

காபனிக் உரங்கள் என்ற போர்வையில் சீன நகர கழிவுகளை இறக்குமதி செய்யும் முயற்சியில் இந்த நியாயமான சந்தேகம் எழுந்துள்ளது. உயிரியல் ரீதியாக, காபனிக் உரங்களின் செயல்பாடு நுண்ணுயிரிகளைப் பொறுத்தது.

இலங்கையின் வன மற்றும் விலங்கு தடைச் சட்டங்களின் கீழ் கூட இத்தகைய கழிவுகளை இறக்குமதி செய்ய முடியாது.

இத்தகைய தீர்வுகளால் மனித உயிர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்கள் மற்றும் பக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகள் இதன் மூலம் நாட்டிற்குள் நுழையாது என்பதற்கு அரசாங்கம் என்ன உத்தரவாதம் அளிக்கிறது? தனது அதிகாரத்தில் உள்ள அனைத்தையும் கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிக்கு சிறந்த பதில் தான் விவசாய அமைச்சின் நிரந்தர செயலாளர் ஒருவரின் பதவி விலகலாகும்.

தற்போதைய அரசாங்கத்தின் விவசாய அமைச்சகத்தின் செயலாளர் பதவி விலகியுள்ளமை மூன்று மாதங்களில் இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, முதலீட்டு பனியகம் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பனியக தலைவர்களும் இராஜினமா செய்தனர்.

இந்த இராஜினமாக்களுக்கு முக்கிய காரணம்,அறிவில்லாத அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவுகளாகும் தற்போதைய அரசாங்கம் நிபுணர்களின் கருத்துக்களைப் பொறுத்து செயல்படுகிறது அல்ல என்பதும் முடிவுகளை எடுக்கும்போது அவற்றைப் புறக்கணிக்கிறது என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது.

கொரோனா தொற்றுநோய்க்கு முகங்கொடுக்கும் போதும், அரசாங்கம் சுகாதார அதிகாரிகளுடன் இருந்து செயற்பபடாமல் வெரும் அரசியல் முடிவுகளை எடுத்தது.

இருபத்தெட்டு நோயாளிகள் ஒரு பிரச்சினையா மற்றும் போரை முடிவுக்கு கொண்டுவந்தவர் தான் என்று பெருமை பேசிய ஜனாதிபதி, காபனிக் உரங்கள் பற்றி இன்று அளித்த அறிக்கைகள் நாட்டின் அடுத்த பேரழிவிக்கான தலையீடு ஆகும்.

காபனிக் உரங்களை அரசாங்கம் கையாளுவதிலும் இதே நிலைதான். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விவசாயம் தொடர்பான நிபுணர்களின் கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டு, அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் அரசாங்கம் செயல்படுவது நாட்டுக்கு ஆபத்தாகும்.

வருங்காலத்தின் பெயரில், காபனிக் உரங்கள் குறித்த இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், இத்தகைய நடவடிக்கைகள் அரசாங்கத்தின் கஜமித்துரு கூட்டாளிகளுக்கு மற்றொரு பொருளாதார பலமாக மாறியுள்ளதுடன், நாட்டின் விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கும் தீர்வு காண வேண்டும்.

ஏற்படக்கூடிய பேரழிவை எதிர்த்துப் போராட உடனடியாக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் தனது அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team