அரசாங்கத்தின் முடக்கல் தோல்வி - அமைச்சர்கள் மக்களின் உயிர்களை ஏலம்விடுகின்றனர்- சஜித்..! - Sri Lanka Muslim

அரசாங்கத்தின் முடக்கல் தோல்வி – அமைச்சர்கள் மக்களின் உயிர்களை ஏலம்விடுகின்றனர்- சஜித்..!

Contributors

அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ள முடக்கல்நிலை தோல்வியடைந்துள்ளது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய முடக்கல் நிலை தோல்வியடைந்துள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
வீதிகளில் காணப்படும் அத்தியாவசியமற்ற வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளும்போது இது தெளிவாக புரிகின்றது-ஆனால் அரசாங்கம் முடக்கல்நிலை நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தொற்று பரவத்தொடங்கிய சீனாவை இரண்டுமடங்கு அதிகமானவர்கள் இலங்கையில் உயிரிழந்துள்ளனர்,தொழில்சார்நிபுணர்கள் அரசியல்வாதிகள் வர்த்தக பிரமுகர்கள் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் என பலதரப்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
எங்களிற்கு மிகநெருக்கமானவர்களை இழந்த வலியை நாங்கள் அனுபவித்துள்ளோம்,நான் எனது தந்தையை இழந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் சுமார் பத்தாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 200 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள எதிர்கட்சி இலங்கையில் பெருந்தொற்று காணப்பட்டாலும் காணப்படாவிட்டாலும் 200 பேர் உயிரிழக்கின்றர் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார் அதுவேற விடயம் எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் சாதாரண சளி போன்றது என்பதால் அது குறித்து அதிககவனம் செலுத்தக்கூடாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் மக்களின் உயிர்களை ஏலம்விடுகின்றனர் போல தோன்றுகின்றது அரசியல்வாதிகள் உத்தரவிடுவதால் சுகாதார பணியாளர்கள் கடும் அழுத்தத்திற்குள்ளாகியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team