அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகள் அரசுக்கு எதிராக எடுத்த தீர்மானம்..! - Sri Lanka Muslim

அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகள் அரசுக்கு எதிராக எடுத்த தீர்மானம்..!

Contributors
author image

Editorial Team

அரசாங்கத்தின் 11 கூட்டணி கட்சிகள் இணைந்து தனியாக மே தின கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் கடந்த வியாழக்கிமை நடைபெற்ற கூட்டத்தில் 11 கட்சிகளின் தலைவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர்களான அத்துரலியே ரதன தேரர், கெவிந்து குமாரதுங்க, அதாவுல்லா, டியூ. குணசேகர, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, டிரான் அலஸ் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாற்று அணியும் இந்த மே தின கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளது.

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனியாக கூட்டத்தை நடத்தவுள்ளதுடன் அரசாங்கத்தின் 11 கூட்டணி கட்சிகள் தனியாக இணைந்து மே தின கூட்டத்தை நடத்தவுள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team