அரசாங்கத்திற்குள் உள்ள முரண்பாட்டுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எடுக்கப்படும்..! - Sri Lanka Muslim

அரசாங்கத்திற்குள் உள்ள முரண்பாட்டுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எடுக்கப்படும்..!

Contributors
author image

Editorial Team

ஆளும் கட்சிக்கும், பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காணப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வேறுபட்ட கொள்கையினை கொண்ட கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணியமைத்துள்ள போது கருத்து வேறுப்பாடுகள் தோற்றம் பெறுவது இயல்பானது எனவும் இவ்வாறான தன்மையே இடம் பெற்று முடிந்த பொதுத்தேர்தல் காலத்திலும் காணப்பட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

எல்லை நிர்ணயம், தேர்தல் முறைமை ஆகிய இரு காரணிகளையும் கொண்டு ஆளும் கட்சிக்கும், பங்காளி கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. அனைத்து முரண்பாடுகளுக்கும் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காணப்படும்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் நாளாந்தம் கைது செய்யப்படுகிறார்கள்.

குண்டுத் தாக்குதல் சம்பவத்துக்கு முன்னர் இறக்குமதி செய்யபட்ட 6,000 ஆயிரம் வாள்கள் தொடர்பில் விசாரணகளை முன்னெடுக்க இரண்டு பிரத்தியேக குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குண்டுத் தாக்குதல் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கு தேவையான ஆதாரங்களை சிறந்த முறையில் முதலில் திரட்டிக் கொள்ள வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் தீர்மானத்தை அரசாங்கத்தினால் எடுக்க முடியாது. அவ்விடயம் குறித்து சட்டமா அதிபர் ஆராய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team