அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 7 ஆம் திகதி கொழும்பில் போராட்டம் - Sri Lanka Muslim

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 7 ஆம் திகதி கொழும்பில் போராட்டம்

Contributors

பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசிய கட்சி எதிர்க்­கட்­சி­களின் எதிர்ப்பு கூட்டின் பங்­காளிக் கட்­சி­க­ளையும் சிவில் அமைப்­புக்­க­ளையும் தொழிற்­சங்­கங்­க­ளையும் இணைத்­துக்­கொண்டு அர­சாங்­கத்­துக்கு எதி­ராக மாபெரும் போராட்டம் ஒன்றை எதிர்­வரும் ஏழாம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்­பாக நடத்­த­வுள்­ள­தாக ஐக்­கிய தேசிய கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திஸ்ஸ அத்­த­நா­யக்க தெரி­வித்தார்.

கசினோ சட்­ட­மூ­லத்தை முழு­மை­யாக அகற்­றுதல், வரவு-செல­வுத்­திட்­டத்தில் மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்­களை வழங்­குதல் ரத்­து­பஸ்­வல மக்­க­ளுக்கு நியா­யத்தை பெற்­றுக்­கொ­டுத்தல் மற்றும் 17 ஆவது திருத்தச் சட்­டத்தை மீண்டும் கொண்­டு­வ­ருதல் போன்ற விட­யங்­களை வலி­யு­றுத்­தியே இந்த அர­சுக்கு எதி­ரான போராட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.
கட்­சியின் தலை­­மைய­க­மான ஸ்ரீகொத்­தாவில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறு­கையில்,
ஏழாம் திகதி பி.பகல் மூன்று மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்­பாக இந்த மாபெரும் ஆர்ப்­பாட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. இந்த ஆர்ப்­பாட்­டத்தில் கலந்­து­கொள்­ளு­மாறு சிவில் அமைப்­புக்கள் மற்றும் தொழிற்­சங்­கங்கள் மற்றும் அர­சியல் கட்­சி­க­ளுக்கு திறந்த அழைப்பை விடுக்­கின்றோம்.
இந்த ஆர்ப்­பாட்­டத்தை நான்கு முக்­கிய விட­யங்­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு முன்­னெ­டுக்­கின்றோம். குறிப்­பாக கசினோ சட்­ட­மூலம் தற்­போது தற்­கா­லி­க­மா­கவே அகற்­றப்­பட்­டுள்­ளது. எனவே அதனை முழு­மை­யாக நீக்­கு­மாறு இந்த ஆர்ப்­பாட்­டத்தின் ஊடாக கோரிக்கை விடுக்­க­வுள்ளோம். குறித்த வர்த்த­மானி அறி­வித்­தலை திருத்­தி­ய­மைத்து மீண்டும் கொண்­டு­வ­ர­வுள்­ள­தாக முத­லீட்டு ஊக்­கு­விப்பு அமைச்சர் குறிப்­பிட்­டுள்ளார். அந்­த­வ­கையில் அபாயம் இன்னும் நீங்­கி­வி­ட­வில்லை. எனவே இதனை முழு­மை­யாக நீக்­கு­மாறு ஆர்ப்­பாட்­டத்தில் வலி­யு­றுத்­துவோம். எதிர்­வரும் வரவு செல­வுத்­திட்­டத்தின் ஊடாக மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்­களை வழங்­க­வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கின்றோம். குறிப்­பாக அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள உயர்வு வழங்­கப்­ப­ட­வேண்டும். எனவே ஆர்ப்­பாட்­டத்தில் இத­னையும் வலி­யு­றுத்­த­வுள்ளோம்.
அடுத்­த­தாக அர­சி­ய­ல­மைப்பின் 17 ஆவது திருத்தச் சட்­டத்தை மீண்டும் கொண்­டு­வ­ர­வேண்டும். அதற்­க­மைய சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் நியமிக்கப்படவேணடும்.
மேலும் ரத்துபஸ்வல மக்களுக்கு நியாயத் தைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்துவோம். இந்த நான்கு விடயங்களை வலியுறுத்தியே அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.vk

Web Design by Srilanka Muslims Web Team