அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி விரும்பினால் வெளியேறலாம் - பொதுஜன பெரமுன நேற்றையதினம் பகிரங்கமாக அறிவித்துள்ளது..! - Sri Lanka Muslim

அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி விரும்பினால் வெளியேறலாம் – பொதுஜன பெரமுன நேற்றையதினம் பகிரங்கமாக அறிவித்துள்ளது..!

Contributors
author image

Editorial Team

ஆளும் சிறிலங்கா பொதுஜன முன்னணி கூட்டணியிலிருந்து முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தலைமையிலான அணியினர் விரும்பினால் வெளியேறலாம் என்று பொதுஜன முன்னணி நேற்றையதினம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. அத்துடன் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ( Dayasri Jeyasehara)தனது சொற்பிரயோகத்தைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என பொதுஜன முன்னணியிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமாசிறி (Kumarasri), மற்றும் அமைச்சர் சனத் நிஷாந்த (Sanath Nishntha) ஆகியோர் சுதந்திரக் கட்சியை கடுமையாகத் தாக்கி விமர்சனம் வெளியிட்டனர்.

இதன்போது, சுதந்திரக் கட்சி கூட்டணிக்குள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரச்சினையில்லை என்றும், இது எனது தனிப்பட்ட கருத்தே அன்றி, அது கூட்டணியின் உத்தியோகபூர்வ அறிவிப்பாக அமையாது என்றும் பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ் குமாரசிறி சுட்டிக்காட்டினார்.

Web Design by Srilanka Muslims Web Team