அரசாங்கத்துடன் இருப்பதா இல்லையா நாளை அவசரமாக கூடுகின்றது முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடம் - Sri Lanka Muslim

அரசாங்கத்துடன் இருப்பதா இல்லையா நாளை அவசரமாக கூடுகின்றது முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடம்

Contributors
author image

Editorial Team

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நாளை 6.30 மணிக்கு அவசரமாக கூடுகின்றது.
ஊவா மாகாண சபைத் தேர்தலில் அரசுக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை அடுத்து – முஸ்லிம் காங்கிரஸ் அரசில் தொடர்ந்து இணைந்திருப்பதன் வகிபாகம் தொடர்பில் இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்போகின்றதாக அறிய முடிகின்றது.

 

அரசுக்கெதிராக எதிர்க்கட்சிகளின்  கூட்டின் அவசியம் ஊவாத் தேர்தல் முடிவுகளில் உணரப்பட்டுள்ளதாக மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று தமிழ் ஊடகம் ஒன்றுக்கு கருத்துக் கூறியிருப்பதன் பின்னணியலேதான் மு.காவின் உயர் பீடம் அவசரமாக கூடுகின்றது.

 

அரசுக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்ள உரிய தருணம் இதுவே எனவும் இது தொடர்பில் தீர்க்கமான முடிவை நாளைய கூட்டத்தில் எடுக்கவேண்டும் என கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீமுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும்  தலைவர்  ஹக்கீம் இது தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கலாம் என உயர் பீட உறுப்பினர் ஒருவர் சற்று முன் சிறிலங்கா முஸ்லிம்ஸ் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team