அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது குறித்து ஹக்கீம் கவனம் - Sri Lanka Muslim

அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது குறித்து ஹக்கீம் கவனம்

Contributors
author image

Editorial Team

அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கம் கொள்கைகளில் மாற்றம் செய்யாவிட்டால்ää ஆளும் கட்சிக்கான ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொள்ள ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கவனம் செலுத்தி வருகின்றது.

 

ஊவா மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அடைந்த தோல்வி அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமை போன்ற காரணிகளின் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

 

அரசாங்கத்தை விட்டு விலக வேண்டுமென கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் தலைமைத்துவத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சியுடன் இணைந்திருப்பதா இல்லையா என்பது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி தேர்தல் குறித்து ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உரிய பதில் கிடைக்காவிட்டால் மாற்று வழியொன்றைத் தேடிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

 

அரசாங்கம் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாத நிலைமையில் அரசியல் ரீதியான தீர்வு ஒன்றை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

 

கட்சி தொடர்ந்தும் காத்திருப்பதில் அர்த்தமில்லை.

நாட்டில் பிரச்சினைகள் கிடையாது என எவருக்கும் சொல்ல முடியாது.

 

பிரச்சினை இல்லாவிட்டால் 30 ஆண்டுகால போர் இடம்பெற்றிருக்காது.

பிரச்சினைகளுக்கு அரசாங்கம் துரித கதியில் தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டும்.

 

அரசாங்கத்தின் வேகமான பயணத்தை மக்கள் நிராகரித்துள்ளனர்.

மக்களின் மனோநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team