அரசாங்கம் அரசியல் செய்துகொண்டிருந்தால் அதிகமானர் எதிர்வரும் நாட்களில் உயிரிழப்பார்கள்..! - Sri Lanka Muslim

அரசாங்கம் அரசியல் செய்துகொண்டிருந்தால் அதிகமானர் எதிர்வரும் நாட்களில் உயிரிழப்பார்கள்..!

Contributors

கொரோனா வைரஸ் நாட்டில் வேகமாகப் பரவி வருவதால் நாட்டை உடனடியாக முடக்க வேண்டும் எனத் தெரிவிக்கும் அத்மீமன தயா ரதன தேரர், மக்களின் வீடுகளில் உணவுப் பொருள்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. எனவே நாட்டை உடனடியாக முடக்க வேண்டும். வைத்தியர்களின் கருத்துகளை அரசாங்கம் கேட்காது, அரசியல் செய்துகொண்டுள்ளனர் எனவும் குற்றஞ் சுமத்தினார்.

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. எனவே, இப்போது வைத்தியர்களின் ஆலோசனைகளைக் கேட்காது அரசியல் செய்துகொண்டிருந்தால் அதிகமானர் எதிர்வரும் நாள்களில் உயிரிழப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team