அரசாங்கம் மகிழ்ச்சியடையக் கூடிய தேர்தல் முடிவுகள் ஊவாவில் கிடைக்காது-அத்துரலிய ரத்ன தேரர் - Sri Lanka Muslim

அரசாங்கம் மகிழ்ச்சியடையக் கூடிய தேர்தல் முடிவுகள் ஊவாவில் கிடைக்காது-அத்துரலிய ரத்ன தேரர்

Contributors
author image

Editorial Team

அரசாங்கம் மகிழ்ச்சியடையக் கூடிய தேர்தல் முடிவுகள் ஊவாவில் கிடைக்காது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

 

அரசாங்கம் தமது கட்சியின் கொள்கை குறித்து சரியாக செவிகொடுத்து அறிந்து கொள்ளவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

 

அரசாங்கத்திடம் ஜாதிக ஹெல உறுமய முன்வைத்த யோசனைகள் தொடர்பில் எந்த முனைப்புகளை காணமுடியவில்லை.

 

தேர்தல் பிரச்சாரங்களில் இருந்து நாங்கள் ஒதுங்கியிருந்த போதிலும் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்க போவதில்லை.

 

தேவையான விடயங்கள் பற்றி நாம் பேசுவோம். அதற்காக குரல் கொடுப்போம்.

 

ஊவா தேர்தல் முடிவுகள் பற்றி இப்போதே எம்மால் எதிர்வுகூறமுடியாது. அது ரகசியமான தேர்தல். மக்கள் தமது பொறுப்பை நிறைவேற்றுவார்கள் எனவும் அத்துரலிய ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team