அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக மாஞ்சோலை மாதர் சங்கம் என்ற போலி பெயரில் வழக்கு - Sri Lanka Muslim

அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக மாஞ்சோலை மாதர் சங்கம் என்ற போலி பெயரில் வழக்கு

Contributors
author image

ஓட்டமாவடி செய்தியாளர்

மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட மாஞ்சோலை 207ஏ கிராம சேவகர் பிரிவின் மாஞ்சோலை மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் என்ற போலி பெயரில் அரசாங்க அதிகாரிகளுக்கெதிராக  தொடரப்பட்ட வழக்கு மட்டக்களப்பு மேல் நீதி மன்றத்தினால் தள்ளு படி செய்யப்பட்டது.

 

கடந்த 2013.04.16ஆம் திகதி மாஞ்சோலை மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொது கூட்டமும் நிருவாகத்தெரிவும் மாஞ்சோலை அர்-ரஹ்மா குர்ஆன் கலாசாலை மன்டபத்தில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருத்தது.

 

மாஞ்சோலை 207ஏ கிராம சேவகர் அவர்களுக்கும் மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுக்கிடையே இடம் பெற்ற வாக்கு வாதத்தின் விளைவாக குறிந்த கூட்டம் முன்னால்  கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளார் எம்.சீ. அன்சார் அவர்களால் உத்திவைக்கப்பட்டது.

 

மீண்டும் கூட்டம் நடாத்ததுவதற்காக 2013 வருடம் 7 மாதம் கூட்டப்பட்ட போது மட்டக்களப்பு மேல் நீதி மன்றத்தின் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருத்தமைக்காக வேண்டி மீண்டும் கூட்டம் உடனடியாக இடை நிறுத்தப்பட்டது.

 

புதிய நிருவாக சபைத்தெரிவுக் கூட்டம் நடத்து முடித்ததாக கோரி புதிய மாதர் சங்க நிருவாக சபை உறுப்பினர்கள் தாம் என்று கூறிய ஒரு குழுவினரால் புதிய நிருவாக தெரிவு நடத்ததாக கூறி மாஞ்சோலை கிராம சேவகர் அவர்களால் நடக்காத நிருவாகத்தெரிவுக்கு உறுதிச் சான்றிதழ் வழங்கி போலி ஆதாரங்களை நீதி மன்றத்தில் சமர்ப்பித்து கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் கே.அருத்தவராஜா,முன்னால் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் எம்.சீ.அன்சார்,ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் முன்னால் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஏ.ஜாபீர் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

 

ஒன்னறை வருடகாலமாக 11தவனைகளின் அடிப்படையில் இவ்வழக்கு இழுபடியாக நடை பெற்று முடித்துள்ளது.

 

இருப்பினும் ஏதிர் தரப்பு வாதிகளால் முன்வைக்கப்பட்ட குற்ற சாட்டுக்கள் போலி என கருதிய நீதி மன்றம் நேற்று 18.09.2014 வியாழக்கிழமை உடனடியாக இவ்வழக்கை தள்ளு படி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Web Design by Srilanka Muslims Web Team