அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக கடமைகளை பொறுப்பேற்றார் சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க - Sri Lanka Muslim

அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக கடமைகளை பொறுப்பேற்றார் சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க

Contributors

அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளரான திரு.மொஹான் சமரநாயக்க கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடமைகளை பொறுப்பேற்பதற்காக இன்று காலை (19) வருகைதந்த அவரை திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து அவர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

உள்நாட்டு வெளிநாட்டு ஊடகத்துறையில் 4 தசாப்த காலம் சிறப்பான அனுபவத்தை கொண்டவர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையை பொறுப்பேற்பதற்கு முன்னர் ஜனாதிபதி ஊடகத்துறையில் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றினார்.

‘தவச’ பத்திரிகையின் துணை ஆசிரியராக இணைந்து ஊடகத்துறையில் பிரவேசித்த இவர், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் உயர் பதவிகளை வகித்துள்ளார்.

இதேபோன்று ஜக்கிய நாடுகள் சபையின் செய்தி பிரிவின் பிரதானியாக நீண்ட காலமாக கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Web Design by Srilanka Muslims Web Team