அரசியலுக்கு நடிகைகள் தேவையில்லை: ஜே.வி.பி - Sri Lanka Muslim

அரசியலுக்கு நடிகைகள் தேவையில்லை: ஜே.வி.பி

Contributors

மாகாணசபைத் தேர்தலில் மக்கள் ஆதரவினை வெல்ல முடியாது என்பதனை உணர்ந்த அரசாங்கம், நடிகைகளை தேர்தலில் போட்டியிடச் செய்யத் திட்டமிட்டுள்ளது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

திறமையான மக்களுக்கு தொண்டாற்றக் கூடியவர்களை அரசாங்கம் தேர்தலில் போட்டியிடச் செய்யவில்லை.

மாறாக, கடத்தல்காரர்கள், அரசியல்வாதிகளின் வாரிசுகள், உறவினர்கள், அழகைக் காண்பித்து மக்களை ஏமாற்ற முடியும் என நம்பும் நடிகைகள், பாடகிகளை அரசாங்கம் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்க உள்ளது.

நடிக நடிகையருக்கு அரசியலில் ஈடுபட முடியாது என்பது எமது கட்சியின் நிலைப்பாடல்ல. எனினும், எதேனும் ஓர் காரியத்தில் இறங்கும் போது அது பற்றிய அடிப்படை அறிவேனும் இருக்க வேண்டியது அவசியமானது.

இதற்கு முன்னரும் தென் மாகாணத்தில் நடிகைகள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளனர். எனினும், இவர்கள் ஒருநாளும் மக்களுக்காக குரல் கொடுத்தில்லை.
தற்போதைய அரசியல் கலாசாரத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

உடல் அழகு மட்டுமுடைய நடிகைகளை விடவும் அரசியல் தெளிவுடைய புத்திஜீவிகளை அரசியலில் ஈடுபடுத்த வேண்டுமென ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.(lw)

Web Design by Srilanka Muslims Web Team