அரசியலுக்கு வருவதானது இஸ்லாத்தை விட்டு இணைவைப்பதற்கு சமம் - ஹாரூன் ஸஹ்வி - Sri Lanka Muslim

அரசியலுக்கு வருவதானது இஸ்லாத்தை விட்டு இணைவைப்பதற்கு சமம் – ஹாரூன் ஸஹ்வி

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

– கல்குடாவின் சமூகப்பணியில் தனிமனிதனாக நிலைத்து நின்று பாரிய பங்கேற்கும் -ஹாரூன் ஸஹ்வி

 

கல்குடா பிரதேசத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு தனிமனிதனால் கற்பனைபன்ன முடியாதளவுக்கு தனிமணிதனாக நிலைத்து நின்று ஓட்டமாவடியை சேர்ந்த HMM.ஹனிஃபா மூலமாக அறிமுகமான சவூதி அராபியாவில் உள்ள அபூ ஹுஸாம் எனும் கொடை வள்ளளின் முழுமையான உதவியோடு அல்.ஹிம்மா (AL-QIMMAH ASSOCIATION) எனும் தனியார் நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் பாரிய சமூகப்பணியினை இஸ்லாமிய மதத்தினை மட்டும் மையமாக வைத்து செயற்படாமல் எல்லா சமூகமும் பயனடையும் வகையில் முன்னெடுத்து செல்கின்ற MMS.ஹாரூன் சஹ்வி அவர்கள் கிழக்கு மாகாணத்திலே நிகழ்காலத்தில் பலராலும் பேசப்படுகின்ற மனிதராக உருவாகிவருகின்றார். இவரை அண்மையில் எமது சிறிலங்கா முஸ்லிம்ஸ்  இணைய நாளிதளின் வாசகர்களுக்காக சந்திக்க நேரிட்ட வாய்ப்பு கிடைத்த போது பல விடயங்களை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தது.

 

இவர் கல்குடாவில் தெளஹீத் ஜமாத்தின் முக்கியமான கொள்கை பரப்பாளர்களில் ஒருவராகவும், நீண்ட காலம் அதன் செயலாளராகவும் பணியாற்றிவந்தவராவார். ஆனால் அதன்பிற்பாடு கல்குடா தெளஹீத் ஜாமாத்தினருக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக கல்குடா தெளஹீத் ஜாமாத்தில் தான் வகித்த அனைத்து பதிவிகளிலும் இருந்து விலகிக்கொண்டதோடு கொடைவள்ளல் அபூ ஹுஸாமின் முழுமையான உதவியுடன் அல்.ஹிம்மாஹ் நிறுவனத்தினை நிறுவி இஸ்லாமிய மதப்பிரச்சார இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு தனது சமூகப்பணியினை கல்குடாவில் முனெடுத்து வருகின்றார்.

 

இவருக்கும் கல்குடா தெளஹீத் ஜமாத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட பினக்குகள் பற்றி வாசகர்களுக்காக கேட்டபோது தனது பக்கம் உள்ள நியாயமான காரணங்களை ஆதாரத்துடன் வெளிக்காட்டி உரையாடிய ஹாரூன் அவர்கள், துரதிஸ்டவசமாக எனது வியாபாரத்தில் ஏற்பட்ட கடன் காரணமக சவூதி அராபிய சகோதரி உம்மு உஸ்மான் அவர்கள் அனாதை சிறுவர்களுக்காக அனுப்பிய பணத்தொகையினை தெளஹீத் ஜாமத்தின் அனாதைகளுக்கான வங்கிக்கணக்கில் இருந்து ஜமாத்தின் தலைவரின் அனுமதியோடும், ஏனையோரின் விருப்பத்தோடும் கடனாக பெற்றுக்கொண்டதாகவும் பின்பு ஜமாத்தை விட்டு விலகும் முன்பே அதனை சட்டப்படி செலுத்தி விட்டதாகவும் தெரிவித்தார்.
கல்குடா தெளஹீத் ஜாமாத்தின் நிருவாக பொருப்பில் இருந்து வெளியே நின்று என்னால் முடியுமான உதவியை கல்குடா தெளஹீத் ஜமாத்துக்கு செய்ய உள்ளதாகவும் ஜாமாத்துடனும் ஜாமாத்தின் முக்கியஸ்தர்களான சகோதரர்களாகிய பீர்மொஹமட், ஹபீப், முஸ்தபா போன்ற மெளளவிமார்களுடன் சிறந்த முறையில் நட்பினை பேனிவருவதாகவும் தெரிவித்து கொள்வதோடு தான் தெளஹீத் மத்ர்ஸாவிலேயே குர் ஆனை கற்றதாகவும், தெள்ஹீத்வாதியாகவே வளர்ந்ததாகவும், தெளஹீதையே கல்குடாவில் போதித்ததாகவும், அல்லாஹ்வின் நாட்டப்படி தெளஹீத் வாதியாகவே மரணிக்க ஆசைப்படுவதாகவும் விளக்கமளித்தார்.

 

ஹிம்மாஹ் (QIMMAH) என்பது தமிழில் உச்சி (TOP) என்பதனை பொருளாக கொண்டதாகவும், இளைஞசர்களை வைத்து உடல் சார்ந்த மனிதாபிமான பனிகளை மட்டும் செய்தல் என்ற நோக்கத்தினை அடிப்படை இலட்சியமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்த ஹாரூன் அவர்கள், கல்குடாவை மையமாக வைத்து அதிலும் ஓட்டமாவடியில் பல கோடி ரூபாய்கள் பெருமதி உள்ள நான்கு அல்லாஹ்வினுடைய மாளிகைகள் மூன்று வருடத்துக்குள் அல்.ஹிம்மாஹ் நிறுவனத்தின் மூலம் கட்டிமுடித்துள்ளதாக தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் நோன்பு காலங்களிலும் ஹஜ் காலங்களிலும் தன்னிறைவு அடையக்கூடிய நன்கொடைகளையும், அதிகளவான குர்பான் இறைச்சிகளையும் இஸ்லாமிய ரீதியில் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கும் இவருடைய நியாயமான முடிவானது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களால் பாராட்டப்பட கூடிய விடயமாக காணப்படுகின்றது.

 

 45 அனாதை குடும்பங்களுக்கு சவூதியிலிருந்து நேரடியாக அவர்களுடைய வங்கிக்கணக்குகளுக்கு மாதந்தம் 25000 ரூபாய்கள் பெற்றுக்கொடுப்பதோடு, 1500 குடிநீர் கிணறுகளையும், நிலக்கீழ் நீர் குழாய்களையும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

 

இன்னும் கல்குடாவில் வைத்திய துறையில் கல்விகற்கும் பத்து மாணவர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபாய்கள் மேற்படிப்பிற்காக கொடுப்பதோடு, இலவச வைத்திய முகாம்கள் , கண்பார்வை இலவச குறைந்தோருக்கான மூக்குக்கண்ணாடி விநியோகம் மற்றும் பிரதேசத்தில் வீடிலில்லாத பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு ஆறு வீடுகளையும் நிர்மானித்து கொடுத்துள்ளார்.

 

 அதனோடு அல்.ஹிம்மாஹ் நிறுவனத்தினால் ஓட்டமாவடி பாத்திமா பாளிகா பெண்கள் பாடசாலையில் தூய குடிநீர் மாணவிகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக பெரிய கொள்ளளவினை கொண்ட நீர்தாங்கியும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 80 இளைஞசர்களை உள்ளடக்கிய இன் நிறுவமானது அவர்களுக்கு மாதாந்த சம்பள அடிப்படையில் வேலைவாய்ப்பினையும் பெற்றுக்கொடுதுள்ளது.

 

 மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள்,கருதரங்குகள் என பலவகையான இஸ்லாமிய கல்வி சார்ந்த, கல்வி சாராத வகுப்புக்களை மாவர்களின் தேவை கருதி முற்றிலும் இலவசமான முறையில் நாடாத்தி வருகின்ற அதேவேளையில் பாடாசாலையை முடித்து வீட்டில் உள்ள இளைஞசர், யுவதிகளுகும் அவர்களுக்கு தேவையான பயிற்சி வகுப்புக்களையும் அதனோடு சேர்த்த ஆலோசனைகளையும் கல்வி சார்ந்த சமூதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அல். ஹிம்மாஹ் நிறுவனமானது கல்குடாவில் பாரிய சமூகப்பனியினை செய்யும் நிறுவனமாக வீறு நடை போட்டு வருகின்றது.

 

இவ்வாறு சமூகப்பனியில் பாரிய முன்னேற்றம் அடைந்து வரும் ஹாரூனும் அவருடைய நிறுவனமும் காய்க்கின்ற மரத்துக்குத்தான் கல்லடி என்பது போல சமூக வளைத்தளங்களிலும், முகநூல்களிலும்,மக்கள் மத்தியிலும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவதை பற்றிய கேள்வியினை தொடுக்க நேரிட்டது. அதிலும் முக்கியமாக விமர்சிக்கப்படும் விடயமான முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்படும் நிதியினை பெளத்த விகாரைகளுக்கும் , ஏனைய மதஸ்தானங்களுக்கும் நன்கொடையாக கொடுப்பதைப்பற்றி கேட்ட போது, இலங்கையானது பல்லின மக்கள் வாழ்கின்ற நாடாகும் அதிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையாகவே வாழ்கின்றனர்.

 

 இந்த அடிப்படையில் பெரும்பான்மை சமூகத்தின் அதிருப்திகளாலும், அண்மைக்காலமாக நாட்டிலே முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மை சமூகத்துக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளின் பார்வையிலும் இப்படியான தனியார் நிறுவனங்களின் சமூகப்பணியானது அரபு நாடுகள் ஒருங்கிணைந்து இஸ்லாமிய வளர்ச்சியை இலங்கையில் ஏற்படுத்தும் ஒரு நாசகார வேலையென பெரும்பான்மை அல்லது ஏனைய சமூகத்தின் மத்தியிலிருக்கும் அவநம்பிக்கையினை களைந்தெறியும் முகமாகவே இன் நிறுவனத்துக்கு காரணகர்த்தாவாக விளங்கும் அபூ ஹுஸாம் என்பவருடைய விருப்பத்தின் பேரிலும் ஆலோசனையின் படியிலுமே ஏனை சமூகங்களுக்கும் அல்.ஹிம்மாஹ் நிறுவனத்தின் மூலம் குறிப்பிடதக்க உதவிகள் செய்து கொடுக்கப்படுகின்றன என்பதனை மிகவும் ஆழமான முறையில் விபரித்தார்.

 

அண்மையில் கல்குடா ஸூறா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாலஸ்தீனத்துக்கு ஆதரவான கண்டன பேரணியில் அல்.ஹிம்மாஹ் நிறுவனமானது தனிப்பட்ட முறையில் கறுப்பு நிற ஆடை அணிந்து வந்தது தொடர்பாக சூறா சபையுடன் ஏற்பட்ட பிணக்கு சம்பந்தமாக வினவியபோது, ஏற்கனவே பேருவளையில் ஹிம்மாஹ் நிறுவனத்தை அரசாங்கத்துக்கும் பாதுகாப்பு படையினருக்கும் சாதகமான அமைப்பு என சூறா சபையின் உறுப்பினர் பேறுவளை பகுதியில் தெரிவித்த காரணத்தினால் இது சம்பந்தமாகா சூறா சபை உறுப்பினரும் கோறளை பற்று மத்தி உதவி திட்டமிடல் பனிப்பாளர் SAM.றியாஸ் அவர்களுக்கு முறையிட்ட பிறகும் ஏற்பட்ட மனக்கசப்பினால் மாற்றமடையாத நாங்கள் ஹிம்மாஹ் நிறுவனத்தின் இலட்சினைகள் ஏதும் பொறிக்கப்படாத நிலையில் சூறா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப்பேரனியில் கலந்து கொண்டதாகவும்.

 

இது சம்பந்தமாக சூறா சபை உறுப்பினர் ஹில்மி அவர்களிடம் அதற்கு முதல் நாளே தொலைபேசியில் ஹிம்மாஹ் நிறுவனத்தின் உறுப்பினர் என்னை வைத்துக்கொண்டு கறுப்பு நிற ஆடை அணிந்து வருவது பற்றி தெளிவுபடுத்தியதாகவும், ஹில்மி அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். ஆனால் இவ்வாறு சமூகப்பனிகளில் ஈடுபட்டு வரும் எங்களை  சூறா சபையினர் சூறா சபையினர் ஏற்பாடு செய்யும் சமூக பணிகளுக்கு அழைப்பதில்லை என தனது மனவேதனையை தெரிவித்த ஹாரூன் அவர்கள் கல்குடா சூறா சபைக்கும் அல் ஹிம்மாஹ் நிறுவனத்துக்கும் எந்த பிரச்சனைகளும் இல்லை என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

 

கடைசியாக எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணங்கள் ஏதும் உள்ளதா என வினவப்பட்ட போது, தான் உள்ளூர் அரசியல் வாதிகளுடனும், முக்கியமாக கிழக்கு மாகான முதலமைச்சர் நஜீப் A. மஜீத் அவர்களுடனும் நெருங்கிய நட்பினை பேனி வருவதாகவும், தான் அரசியலுக்கு வருவதானது நான் பின்பற்றுகின்ற இஸ்லாம் மதத்தின் கொள்கையிலிருந்து வேறுபட்டு இணை வைப்பதற்கு சமனான விடயம் என குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கை காரணமாகவும், அவர்களின் வேண்டுகோள்களின் படியினாலும் எனது அரசியல் பற்றிய தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யவேண்டி வரலாம் எனவும் கூறினார்.

 

 இதற்கு முக்கிய காரணமாக தற்போது அரசாங்கத்தின் உதவி இன்றியும், மாவட்ட செயலாலரின் அனுமதி இன்றியும் தனியார் நிறுவனங்கள் கூடுதலான சமூகப்பணியினை செய்ய முடியாதுள்ளபடியினால், இதனை கருத்தில் கொண்டே எதிர்காலத்தில் எனது அரசியல் பற்றிய தீர்மானம் மீள்பரிசீலிக்கப்படலாம் என்பதனை விளக்கிக்கூறினார்.
மேலும் ஹாரூன் சஹ்வி அவர்கள் கூறுகையில்,  ஒரு மனிதனை விமர்சிப்பதானது மனிதனுடைய ஜனநாயக உரிமையாகும் என கூறிய அவர் தான் நூற்றுக்கு நூறு வீதம் சரியான மனிதன் எனக்கூறவில்லை எனவும்,

 

 எனது சமூகப்பணி சம்பந்தமான பிரச்சனைகளாக இருப்பினும் சரி,, மக்களுடைய பொதுவான அல்லது தனிப்பட்ட எதும் தேவைகளாக இருப்பினும் சரி எனது நிறுவனத்தின் தொலைபேசி இலக்கமான 065-2258159 என்ற இலக்கத்துக்கு தொடர்பினை ஏற்படுத்தி என்னுடன் கலந்தாலோசிக்கலாம் என மக்களை வேண்டிக்கொண்ட ஹாரூன் சஹ்வி, இந்த கட்டுரையை வாசித்து அவரைப்பற்றிய விடயங்களை அறிந்தமைக்காக இணைய நாளிதல் வாசகர்களுக்கு நன்றியையும் தனது சலாத்தையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக கடைசியாக கூறிக்கொண்டார்.

 

 

kk

 

07

 

06

 

05

 

09

 

08

 

01

 

02

 

03

 

04

 

 
 

Web Design by Srilanka Muslims Web Team