அரசியல்வாதிகள் கொடுக்கும் சில்லறைக்கு வாக்குரிமையை கொடுப்பது சமூக துரோகமாகும் - Sri Lanka Muslim

அரசியல்வாதிகள் கொடுக்கும் சில்லறைக்கு வாக்குரிமையை கொடுப்பது சமூக துரோகமாகும்

Contributors

அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி BA,Hons ) Cairo,Egypt
இப்போது கட்சி அமைப்பது ஆட்சி பிடிப்பது என்பது மக்களை ஏமாற்றும் சிலருக்கு நல்லதொரு வழிமுறையாக ஆகிவிட்டது.கட்சி உருவாக்குவது பின்பு மக்களை அழைத்து தமக்கு ஒட்டு கேட்பது கொடுத்த ஓட்டில் கிடைத்த  பதவியை வைத்து அனுபவிப்பது.மக்களுக்கு சில சில்லறைகளை கொடுத்து ஏமாற்றுவது.இதுதான் அரசியல் கலாசாரமாக மாறிவிட்டது.

 

மக்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகள் கோரிக்கைகள் பற்றிய கட்சியின் கொள்கை பற்றிய தெளிவுகள்,அரசுடன் கட்சி தலைமை மேற்கொண்ட பேரம் பேசல் எதுவும் ஓட்டு போட்டவனுக்கு தெரியாது.தலைவர் ஏதோ கைச்சாத்து இட்டு ஒப்பந்தம் செய்துள்ளார் தொண்டர் அந்த வழியில் ஓட்டு கொடுத்துள்ளார்.இதுதான் கட்சிக்கும் தொண்டனுக்கும் உள்ள தொடர்பு.

 

கட்சி ஆதரவு கட்சி பைத்தியம் தலைவர் பாசம் என்று அணைத்து அரசியல் மோசடியும் தொண்டனுக்கு மூடி மறைக்கபடுகிறது.தான் எந்த நிலையில் இருந்து எந்த நிலைக்கு வந்துள்ளோம் ஏதாவது சமூக மாற்றம் நடந்துள்ளதா என்று அவன் யோசிப்பதில்லை.தலைவன் தேர்தலில் வென்றால் மகிழ்ச்சி.இப்படி தொண்டர்கள் இருக்கும்வரை கட்சி அரிசயல் நடத்தும் வர்க்கம் சுகபோகத்தை அனுபவித்துகொண்டுதான் இருப்பர்.

 

மக்கள் நிலை பற்றிய சரியான வாசிப்பு என்ன?அடுத்த சமூகத்துக்கும் நமது சமூகத்துக்கும் இடையிலான இடைவெளி என்ன?அவர்கள் எந்தவகையில் நம்மைவிட உயர்ந்துள்ளனர்.நமக்கு தரவேண்டிய உரிமை என்ன?பறிக்கப்பட்ட உரிமை என்ன?என்று நமது சுய விபரக்கொவையை சரியாக புரிந்து வைக்காமல் நமது உரிமைகளை அடையாளம் கண்டுகொள்ள முடியாது.

 

உலகம் போகும் அதி வேக போக்கில் மனிதனின் தேவை உரிமை மாறிக்கொண்டே போகிறது.அன்று தேவையற்றது இன்று தேவையாக உள்ளது அன்று தேவையாக இருந்தது இன்று அவசியமாக மாறியுள்ளது.வெறும் சில்லறைகளை எடுத்துகொண்டு அடுத்தவனின் சுகபோக வாழ்க்கைக்கு நமது ரெத்தம் நமது உழைப்பை நமது வாக்குரிமையை வீணடிப்பது தனது அடையாளத்தை தொலைத்த சமூகத்தை போன்றதாகும்.

 

சுதந்திரமான மனிதன் தான் கொடுக்கும் ஒரு ரூபாவுக்கும் வெகுமதி  அறிந்தே கொடுப்பான்.தான் கொடுப்பது என்ன?எடுப்பது என்ன?என்பதை கொடுப்பவன்  அறியாமல் இடையில் இருக்கும் தரகன்  எடுத்துகொள்வது என்பது அறிவு பொங்கிவழியும் இந்த நூற்றாண்டை கற்காலத்துக்கு கொண்டு செல்லும் நிலையாக மாறும்.

 

எனவே மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்.அரசியல்வாதிகள் கொடுக்கும் சில்லரைக்கோ அல்லது அரசுடனான மறைவான பேரம் பேசலுக்கோ தனது வாக்குரிமையை கொடுப்பது சமூக துரோகமாகும்.

 

காணி பூமியை விற்கவோ வாங்கவோ இருதரப்பும் தெளிவாக இருக்கும்போது சமூக எழுச்சிக்கு வித்திடும் வாக்குரிமையை மட்டும் தெளிவான ஒபந்தம் இன்றி கொடுப்பது அறிவுக்கு எதிரான நிலையாகும்.

 

கையில காசு வாயில தோச என்பதுபோல தந்தாள் ஓட்டு தரலனா வேட்டு என்ற ரீதியில் மக்கள் இருந்தால் எந்த கட்சியோ எந்த அரசியல்வாதியோ எமது ஓட்டுக்களை சரியான ஒப்பந்தம் இன்றி சரியான கொள்கை இன்றி திடமான உத்தரவாதம் இன்றி வாங்கிவிட்டு ஓடமாட்டான்.

 

அரசியல் வாதிகளை நம்பி ஓடும் ஓட்டுப்போடும் மக்களே அவர்களுடன் ஒப்பந்தத்தில் சரியாக இருங்கள்.சமூக எழுச்சிக்கும் சமூக உரிமைக்கும் தடையாக இருக்கும் அரிசயல்வாதிகளை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.தேர்தல் கால கூச்சல் பேச்சுக்களில் ஏமாந்துவிடாதீர்கள்.

 

உங்கள் ஓட்டுரிமைக்கு அரசியல் சந்தையில் நல்ல கேள்வி இருப்பதால் கேள்வி கணக்கின்றி ஓட்டை கொடுத்து ஓட்டுக்கு இருக்கும் நல்ல கேள்வியை கேள்விக்குறி ஆக்கிவிடாதீர்கள்.

 

சமுதாய எழுச்சியின் நலன் கருதி உரிமைகள் கருதி எமது ஓட்டுக்கான வெகுமதி நிர்ணயிக்கப்பட்ட பின்பே ஓட்டுகளை கொடுக்கும் புதிய ஜனநாயகத்தை நோக்கி பயணிப்போம்.அரசுக்கும் மக்களுக்கும் இடையில் இருக்கும் இடைத்தரகர்களான அரசியல்வாதிகளின் படுகுழியில் இருந்து நம்மை நாமே காப்போம் நமக்காக நாம் ஆவோம்.கொடுப்பவன் எடுப்பவனுக்கு இடையில் தடுப்பவனையும் கொள்ளையடிப்பவனையும் அடையாளம் காண்போம்.

Web Design by Srilanka Muslims Web Team