அரசியல் கட்சி தொடங்க ஆலோசனை நடத்தவில்லை! - நடிகர் விஜய் அவசர மறுப்பு அறிக்கை. » Sri Lanka Muslim

அரசியல் கட்சி தொடங்க ஆலோசனை நடத்தவில்லை! – நடிகர் விஜய் அவசர மறுப்பு அறிக்கை.

vijay-221013-150

Contributors

அரசியல்கட்சி தொடங்குவதற்கு தாம் ஆலோசனை நடத்தவில்லை என்று நடிகர் விஜய் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். இந்த அறிக்கையில், சமீபத்தில் நான் கேரளாவில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து, அரசியல் சம்பந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. இதைப் படித்துவிட்டு ரசிகர்களும், பொது மக்களும், மீடியா நண்பர்களும் குழப்பம் அடைந்துள்ளார்கள். கடந்த 2 மாதங்களாக ஐதராபாத்தில் நடக்கும் ஜில்லா படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறேன்.

கேரளாவுக்கு நான் செல்லவில்லை. அப்படி இருக்கும்போது, இப்படியொரு தவறான செய்தியின் காரணமாக ரசிகர்கள் மட்டுமின்றி, நானும் குழப்பம் அடைந்துள்ளேன்.இனி வருடத்துக்கு 2 படங்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரவு, பகலென்று பார்க்காமல் உழைத்து வருகிறேன். எனது வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், பக்க பலமாகவும் இருப்பது பத்திரிகை நண்பர்கள்தான். ஆகவே, பத்திரிகை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து உண்மையில்லாத செய்திகளை வெளியிட்டு ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

Web Design by The Design Lanka