அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரிக்கை - உணவு தவிர்ப்பு போராட்டம் 12 ஆவது நாளாகவும் தொடர்கிறது,, - Sri Lanka Muslim

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரிக்கை – உணவு தவிர்ப்பு போராட்டம் 12 ஆவது நாளாகவும் தொடர்கிறது,,

Contributors


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)

அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகின்ற சுழற்சி

முறையில் இடம்பெற்று வருகின்ற உணவு தவிர்ப்பு போராட்டம் நேற்றுடன் 12 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.


கடந்த வெள்ளிக்கிழமை(5) ஆரம்பமாகி இப்போராட்டம் இடம்பெற்று வந்த நிலையில் 11 ஆவது நாளான இன்று(16) பொலிகண்டி வரையிலான பேரணியின் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சுமித்ரா ஜகதீசன் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் என். தர்சினி இதமிழ் தேசிய மக்கள் முன்னணி இளைஞர் தலைவர் துசானந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.உண்ணாவிரதம் இருந்து அதில் இருந்து நீங்கிய அம்பிகைக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என தத்தமது கருத்தில் கூறினர்.

Web Design by Srilanka Muslims Web Team