அரசியல் கைதிகள் விடுதலையில் உரிமை கொண்டாடும் அருகதை த.தே.கூட்டமைப்புக்கு இல்லை..! - Sri Lanka Muslim

அரசியல் கைதிகள் விடுதலையில் உரிமை கொண்டாடும் அருகதை த.தே.கூட்டமைப்புக்கு இல்லை..!

Contributors

நூருல் ஹுதா உமர்

கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதான பாத்திரம் வகித்து உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்தினால் கூட சாதிக்க முடியாத அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தை கோத்தாபய அரசு வெற்றிகரமாக செய்திருக்கிறது. இந்த அரசியல் கைதிகள் விடயத்தில் உரிமை கொண்டாடும் அருகதை தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கோ அல்லது எதிரணி அரசியல்வாதிகளுக்கோ இல்லையென அரசியல் ஆய்வாளரும், சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்க பேரவையின் தலைவருமான எம்.எச்.எம். இப்ராஹிம் தெரிவித்தார்.

இன்று (25) காலை கல்முனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், அரசியல் கைதிகளாக சிறையில் தடுத்து வைத்திருந்தோரை இந்த அரசு விடுதலை செய்ததை பாராட்டியே ஆகவேண்டும். இதை கோத்தாபய அரசு அரசியலுக்காகத்தான் செய்துள்ளார்கள் என்று கூறும் அரசியல்வாதிகளுக்கு ஒரு வியாபாரம் செய்பவர் ஆதாயத்தை முன்னிறுத்தி பல சலுகைகளை வழங்குவதை நினைவூட்ட விரும்புகிறேன். இந்த விடுதலை நடவடிக்கையானது இந்த அரசின் முற்போக்கு நடவடிக்கையாக கொண்டு நாம் பாராட்ட வேண்டும். இந்த விடுதலையில் அரசியல் இலாபம் உள்ளதாக இருக்கிறது என்று கூறுபவர்கள் அந்த இலாபத்தில் மக்களாகிய நாமும் இலாபம் அடைந்துள்ளோம் என்பதை கூறுகிறார்கள் இல்லை.

தமிழ் மக்களின் மனதை வெல்ல இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக நாம் கருதலாம். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பலமாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அடங்களாக ஏனைய தமிழ் அரசியல்வாதிகளினால் கூட சாதிக்க முடியாது போன விடயத்தை இந்த அரசு செய்துள்ளது என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team