’அரசியல் தலைவர்கள் சரியான வழியைக் காட்ட வேண்டும்’ - அதாவுல்லா » Sri Lanka Muslim

’அரசியல் தலைவர்கள் சரியான வழியைக் காட்ட வேண்டும்’ – அதாவுல்லா

athaullah

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஏ.எல்.எம்.ஷினாஸ்


அரசியல் தலைவர்கள் மக்களுக்குச் சரியான வழியைக் காட்ட வேண்டும் என> தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்

‘சமகால அரசியலும் முஸ்லிம் சமூகமும்’ எனும் தொனிப்பொருளில் மக்களைத் தெளிவுபடுத்தும் வகையிலான கலந்துரையாடல், மருதமுனையில் புதன்கிழமை (6) இரவு நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது>’கடந்த காலத்தில்; எமது அரசியல் தலைவர்களால்> இளைஞர் சமூகம் பிழையாக வழி நடத்தப்பட்டிருக்கின்றார்கள். இதனால்> இன்று எமது அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதை அறியாமல் நடு வீதியில் நின்று கொண்டிருக்கின்றோம்” என்றார்.

‘மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதற்கு ஒரு பலமான எதிர்க்கட்சி இந்த நாட்டில் இல்லை. ஆளும் கட்சி இல்லாவிட்டாலும்> பலமான எதிர்க்கட்சி தேவை. இதுவே ஜனநாயக தர்மமாகும்.

‘முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் பற்றிப் பேச முடியாமல் முஸ்லிம் தலைவர்கள் வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு தேர்தல் நடைபெறும்போது> மக்களை அரசியல் தலைவர்கள் பிழையாக வழி நடத்துகின்றார்கள். இந்த நிலையில்> இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்துக்கு அரசியல் ரீதியாக சரியான வழிகாட்டலை வழங்க வேண்டியது எமது பொறுப்பாகும்.

‘மேலும்> 16 வருடங்களுக்கு பின்னர், இப்போது முஸ்லிம் கூட்டமைப்புப் பற்றிப் பேசப்படுகின்றது. கூட்டமைப்பு இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால்> அதன் நோக்கம் மிகத் தெளிவானதாக இருக்க வேண்டும். மீண்டும் ஒருமுறை எமது சமூகத்தையும் இளைஞர்களையும் நடு வீதியில் கைவிட முடியாது” என்றார்.

Web Design by The Design Lanka