அரசியல் போபியா! » Sri Lanka Muslim

அரசியல் போபியா!

politics

Contributors
author image

M.M.A.Samad

ஒவ்வொரு மனிதனும் ஏதோவொரு காரணத்தினால் சாதாரண நிலையிருந்து அசாதாரன நிலைக்குத்தள்ளப்படுகிறான். சிலர் விரும்பாமலே இந்நிலைக்குள்ளாகின்றனர். ஆனால், சிலரோ தங்களது செயற்பாடுகளினால் அசாதாரண நிலையை உருவாக்கிக் கொள்கிறார்கள்.  

பல காரணிகளினால்; ஏற்படுகின்ற அசாதாரண நடத்தைக் கோலங்களானது பலரை பல்வேறு அவஸ்தைகளுக்குள்ளாகின்றது. அந்தவகையில,;; தேர்தல் காலங்களில் அரசியலில் ஏற்படுகின்ற அச்சம் என்ற அசாதாரண நிலைக்கு அதிகம் ஆளாகின்றவர்களாக அரசியல் கட்சிகளின் தலைமைகளும், மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக களத்திலிறங்கி செயற்படுகின்ற வேட்பாளர்களும,; அவர்களின் விசுவாசிகளும் காணப்படுகின்றனர்.

தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளுக்குள்ளும் அதன் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியிலும் அசாதாராண மனநிலையை உருவாக்குகின்ற பல்வேறு முறைசாராக் காரணிகள் காணப்படுவதை அவதானிக்க முடிவதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

இக்காலங்களில் ஏற்படும் போட்டி, பூசல், பொறாமை, நப்பாசை, பழிவாங்கும் தன்மை, காட்டிக்கொடுப்பு, மானபங்கப்படுத்தல் போன்ற அசாதாரண மனநிலையை உருவாக்கக் கூடிய முறைசாராக் காரணிகள் சில வேட்பாளர்களிடமும் அவர்களின் ஆதரவாளர்களிடமும் காணப்படுவதையும், அதனால், அசாதாரன நடத்தைப்பாங்குகள் வெளிப்படுத்தப்படுவதையும் இவை கட்சித் தலைமைகளுக்கிடையிலும்,;;; வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கிடையிலும் பல்வேறு முரண்பாடுகளை, பிரச்சினைகளை, சண்டை சச்சரவுகளை, வேண்டத்தாக வாதப்பிரதிவாதங்களை, சவால்களைத்; தோற்றுவிக்குமெனவும் உளவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தேர்தல் களநிலை
தொகுதி மற்றும் விகிதாசாரம் கலந்த கலப்புத் தேர்தலாக 10ஆம் திகதி நடைபெறவுள்ள இத்தேர்தல் நான்கு தசாப்தங்களின் பின்னர்; கட்சிக்கு மாத்திரம் வாக்களிக்கும் முதல் சந்தர்ப்த்தை வாக்காளர்கள் பெரும்பாலானோருக்கு வழங்கியுள்ளது.

ஏறக்குறைய ஒரு கோடி 80 இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகைமை பெற்றுள்ளனர். இத்தேர்தல் மூலம்  25 நிர்வாக மாவட்டங்களிலுமுள்ள 24 மாகாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 276 பிரதேச சபைகள் அடங்கலாக மொத்தம் 341 உள்ளுராட்சி மன்றங்களிலிருந்து 8,293 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.  

மேலும், 13,000 வாக்களிப்பு நிலையங்கள்; வாக்களிப்புக்காகப் பயன்படுத்தப்படவுள்ளதுடன், இத்தேர்தல் கடமைக்காக 3 இலட்சம் அரச ஊழியர்கள் பணிக்காக அமர்த்தப்படவுள்ளனர். இருமடங்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலாகத் இத்தேர்தல் நடைபெறவுள்ளதனால் இத்தேர்தலுக்காக  500 கோடி ரூபா செலவு செய்யப்படவுள்ளது. அவற்றறுடன் 341 உள்ளுராட்சி சபைகளுக்கும் நடைபெறவுள்ள இத்தேர்தலில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சார்பாக ஏறக்குறை 56 ஆயிரம் வேட்பாhளர்கள் போட்டியிடுகின்றனர்.

இத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவுகள் உள்ளிட்ட ஏனைய செலவுகளுக்காக 74 கோடி ரூபா  செலவிட வேண்டியுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.

பதிவு செய்யப்பட்டுள்ள 70 அரசியல் கட்சிகளில் செயற்படும் கட்சிகள் பல இத்தேர்தலில் தனித்தும் கூட்டிணைந்தும் களத்தில் இறக்கியிருக்கிறது. தென்னிலங்கையின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உருமய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இவற்றோடு பல சிறிய கட்சிகளும் இணைந்தும் தனித்தும் போட்டியிடும் நிலையில்,  வடக்கு கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களில் சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தனித்தும் கூட்டமைத்தும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், இத்தேர்தலுக்கான திகதி தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இக்கட்டுரை எழுதும்வரை தேர்தல்  கண்காணிப்பு அமைப்புக்களின் தகவல்களின் பிரகாரம் தேர்தல் தொடர்பாக சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச் சாட்டுக்களின் அடிப்படையில் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, தேர்தல் சட்ட மீறல் தொடர்பாக 681 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதில் தேர்தல் வன்முறையுடன் கூடிய 594 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பெ;பரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது..

பொதுவாக தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களும், அவர்களது ஆதரவாளர்களும் வெற்றியை நோக்கிய செயற்பாடுகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தினாலும,; ஒரு சில சூழ்நிலைத் தாக்கங்களின் காரணமாக வெற்றியென்ற அந்த வேட்கையானது கேள்விகுள்ளாகின்றபோது, ஒருவகையான அச்ச உணர்வுக்குள் இவர்கள் தள்ளப்படுகின்றார்கள்.  அந்த அச்ச உணர்வின் காரணமாகவே இத்தகைய சட்ட மீறல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

அச்சமும் அரசியல் கட்சிகளும்
அசாதாரண நடத்தைகளை மிதமான அல்லது பாரிய அசாதாரண நடத்தைகள் என உளவியல் ரீதியில் வகைப்படுத்தப்படுகிறது. மிதமான அசாதாரண நடத்தைகளாக பதகளிப்பு நிலை, பாலியல் அசாதாரண நடத்தைகள், உடல் மெய்பாடு கொண்ட அசாதாரண நிலை, ஆளுமையுடன் தொடர்புடைய அசாதாரண நடத்தைகள் என வரையறை செய்யப்படுகின்றன.

பதகளிப்பு அசாதாரண நடத்தை நிலையில் பீதி, அச்சம் என்ற இரு நிலைகளும் உள்ளன. குறித்த ஒரு பொருளுக்கு அல்லது சூழலுக்கு அச்ச உணர்வு  காணப்படுதலை அச்சம் (Phழடியை) எனப்படுகிறது. இந்த அச்ச மனநிலையானது சாதாரண அச்சம், சமூக அச்சம், சூழல்சார்ந்த அச்சம் என்றும் பிரிக்கப்படுகிறது.
சூழல்சார்ந்த அச்சமாக சமகாலத்தில் நிலவும்  தேர்தல் வெற்றி அல்லது தோல்வி குறித்த அச்சமாக அல்லது (Pழடவைiஉழ phழடியை) வாகக் கருத வாய்ப்புண்டு.. இந்த அரசியல் அச்சத்தினால் அல்லது ‘பொலிடிகோ போபியா’வினால் அரசியல்வாதிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் ஆடிப்போய் உள்ளனர்.

ஒரு அரசியல் கட்சியின் அல்லது சுயேட்சைக் குழுவின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சனத்திரளின்;; எண்ணிக்கையை மதிப்பிட்டு மக்கள் இக்கட்சியின் பக்கம் சென்றுவிட்டார்களோ என்று ஏனைய கட்சிகள் ஆதங்கப்படுவதையும், அச்சம் கொள்வதையும்; அவதானிக்க முடிகிறது. இதனால் மாற்றுக் கட்சிகள்  இக்கட்சிக் கூட்டத்திற்குச் சேர்ந்த கூட்;டம் தானாச் சேர்ந்த கூட்டமா அல்லது  சேர்க்கப்பட்ட கூட்டமா என்ற ஆய்வை மேற்கொள்ளவதாக அறிய முடிகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்  கடந்த 26ஆம் திகதி காத்தான்குடியில்; நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டிருந்தார். ஆவர் கலந்துகொண்ட  இக்கூட்டத்தில் பங்குகொண்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு நாங்கள்தான் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்வோரிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனைவை ஆதரிக்கின்ற காத்தான்குடியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது அச்சமடைந்து காணப்படுவதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.  உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தாமரை மொட்டு பாரிய வெற்றி பெறுவதனை எவராலும் தடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம,; சாய்ந்தமருது பிரதேச மக்களின் பிரதேச உணர்வு அல்லது ஒற்றுமையை மாற்றுக் கட்சிக்காரர்களின் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் பிரச்சாரங்கள் தாக்கத்தைச் செலுத்தி விடும் என்றதொரு அச்சத்தினால்; இப்பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸின் பிரச்சாரங்கள் மற்றும் தலைவர் ஹக்கீமின் வரவை இப்பிரதேசத்தில் எதிர்ப்பதாகவும்; தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2015ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்நாட்டில் குடும்ப ஆட்சி, இலஞ்ச, ஊழல், மோசடி நிறைந்த ஆட்சியாக இல்லாது மக்கள் விரும்புகின்ற குடிமக்கள் நிம்மதியாக வாழக் கூடிய சூழல் கொண்ட ஆட்சியாக அமையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய வங்கி பிணைமுறி மோசடியானது எல்லாம் ஒன்றுதான். என்ற மனப்பாங்கை உருவாக்கியிருக்கிறது.

அத்துடன் இக்கூட்டாச்சியிலுள்ள இரு பெரும் கட்சித் தலைவர்களின் போட்டித்தன்மை கொண்ட பிரச்சாரங்களும், சவால்களும் இவ்வாட்சியின் எதிர்காலம் குறித்து, இக்கூட்டாட்சி ஏற்பட கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்களித்த வாக்காளர்கள் மத்தியிலும் ஒரு வகை அச்சம் நிலவுகிறது.

இவ்வாறான அரசியல் சூழலுக்கு மத்தியில் இத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் களம் பல்வேறு விமர்சனங்களாலும், வாக்குறுதிகளினாலும், வெட்டிப் பேச்சுக்களினாலும,; சவால்களினாலும், முறைகேடுகளினாலும், தேர்தல் வன்முறைகளினாலும் சூடேறிக் காணப்படுகிறது.
ஊழல் புரிந்தவர்கள், புரியாதவர்கள், மோசடியில் ஈடுபட்டவர்கள், ஈடுபடாதவர்கள். இனவாதத்திற்கும், பிரதேசவாதத்திற்கும் துணைபோனவர்கள் போகாதவர்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் ஈடுபாடாதவர்கள் என 25 மாவட்டங்களிலும் கட்சிகள் சார்பாக இணைந்தும்,  தனித்தும் , சுயேட்சைக் குழுக்களாகவும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள நிலையில் இவர்களில் யாரை தெரிவு செய்யவது என்ற சத்திய சோதனைக்குள் வாக்காளர்கள் தள்ளப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

இவர்கள் அனைவரும் வெற்றியடைந்து விட வேண்டும் என்ற வேட்கையில் இத்தேர்தல் வெற்றிக்கான போட்டியை வாழ்விற்கும் சாவிற்குமிடையிலான போராட்டமாக கருதி, தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளமையை பல பிரதேசங்களில் காணக் கூடியதாகவுள்ளது. இதனால் ஒரு வகையான அரசியல் அச்சமான ‘பொலிடிகோ போபியா’விற்கு இவர்கள் உள்ளாகி விட்டார்களாக என எண்ணத் தோன்றுகிறது.

பிரதேசங்களும் பிரச்சாரங்களும்
வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள ஒவ்வொருவரும் தங்களது வெற்றி தொடர்பில் கொண்டுள்ள அச்சத்தின் காரணமாக வெற்றிக்கான பிரச்சார யுக்;திகளாக என்னென்ன தந்திரங்களோடு மேற்கொள்ள முடியுமோ அவற்றையெல்லாம் கச்சிதமாக நிறைவு செய்யும் மனப்பாங்கில் உள்ளதை ஒரு சில பிரதேசங்களில் அவதானிக்க முடிகிறது. அதில் ஒன்றாகவே பிரதேசவாதம் எனும் பிரச்சாரத்துரும்பை கையில் எடுத்துச் செயற்பட்டுக் கொண்டிருப்பதையும் நோக்கக் கூடியதாகவுள்ளது.

தெற்கில் தோல்வியை நிச்சயமாக்கிக் கொண்டவர்கள் அல்லது வெற்றியில் சந்தேகம் கொண்டவர்கள் வெற்றிக்கொடியை எட்டிப்பிடிப்பதற்காக தங்களது தேர்தல் பிரச்சார மையப் பொருளாக  மத்திய வங்கி பிணைமுறிவு விவகாரத்தையும், வடக்கின் சமகால நிகழ்வுகளையும் தூக்கிப்பிடித்திருக்கும்  நிலையில் இனவாதத்தையும் அங்கங்கே முன்னிலைப்படுத்தியுமுள்ளனர்.

மகிந்த அணியினர் நல்லாட்;சியின் குறைகiளைச் சுற்றிக் காட்டியும், ஜனாதிபதியினகாலும் பிரதமரினாலும் பிரச்சார மேடைகளில் முன்வைக்கப்படுக்கின்ற கருத்துக்கள் மற்றும் சவால்கள் குறித்தும் தமது பிரச்சாரங்களின் முக்கிய உபாயமாக உபயோகித்து வருவதையும் அவதானிக்கலாம்.

இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியினர் கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொண்ட ஊழல், மோசடிகளை மக்கள் மயப்படுத்தியும், எதிர்காலத்தில் மேற்கொள்வுள்ள அரசியல,; சமூக, பொருளாதார, கல்வி மாற்றம் மற்றும் முன்னேற்ற நடவடிக்கைகள் தொடர்பிலும், கிராம ஆட்சி குறித்தும் மக்களைத் தெளிவூட்டும் வகையில் தங்களது பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றதைக் காணலாம்.

இந்நிலையில், வடக்கு கிழக்கில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக களமிறங்கியுள்ள தமிழ் அரசியல் கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் பிரச்சார மேடைகளில் பல்வேறு கருத்துக்களும் விமர்சனங்களும முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதில், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பிரிந்து நின்று கூட்டமைப்பாகச் செயற்படுகின்ற கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் 2 கோடி ரூபா பெற்றுக்கொண்;ட விடயத்தை தேர்தல் பிரச்சாரங்களின் பேசு பொருளாக்கியுள்ளதைக் காண முடிகிறது.

தழிழ் தேசியக் கூட்டமைப்பு, தமது சமூகத்தின் உரிமைகளை இந்ததேர்தல் வெற்றியினூடாக பெற்றுவிட வேண்டும். இச்சூழலே தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான சரியான சந்தர்ப்பம்;. இச்சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் ஒன்றிணைந்து சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சமூக சிந்தனையை மக்கள் மத்தியில் விதைத்து, தமது பிரச்சார நடவடிக்கைகளை வடக்கு கிழக்கில் மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னிலங்கையின் பெரும்பான்மைக் கட்சிகளினதும், வடக்க கிழக்கு தமிழ் கட்சிகளினதும் மலையக் கட்சிகளினதும் பிரச்சாரங்கள் வௌ;வெறு கோணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிiயில் வடக்கு மற்றும் கிழக்கு அவற்றோடு தென்னிலங்கையிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் முஸ்லிம் சமூகம் சார் கட்சிகளின் பிரச்சாரங்கள் இலக்கில்லாது மேற்கொள்ளப்படும் பயணம் போன்றுள்ளதை காணலாம்.

சமூகத்தின் எதிர்காலம் குறித்த எவ்வித கருத்துக்களையும் மேடைகளில் முன்வைக்காது, பொதுவான தேர்தல் விஞ்ஞாபனங்களைக் கூட மக்கள் முன் முன்னிலைப்படுத்தாது, தமது கட்சி கூடிய ஆசனங்களைப் பெற வேண்டும.; அதன் மூலம் கட்சியும், கட்சியின் விசுவாசிகளும் நன்மையடைந்தால் போதும் என்ற மனப்பாங்கில் தமது தனித்துவத்தை பெரிய கட்சிகளிடம் அடமானம் வைத்துவிட்டு, பகிரங்கமாகவும் முகவர்களினூடாகவும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகள் செயற்படுவதாக நடுநிலையிலிருந்து சமூகத்தைப் பற்றிச் சிந்திக்கின்றவர்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்;.

இவ்வாறான சாணக்கியங்கள்; கட்சித் தலைமைகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், இக்கட்சிகளின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களினாலும் உறுப்படினயான மக்கள் நலன்சார்ந்த கருத்துக்கள் முன்வைக்கப்படுவதைக் காண முடியாதுள்ளது.

இலட்சக்கணக்கான ரூபாய்களை தேர்தல் சந்தையில் முதலீடு செய்துள்ளவர்கள் தங்களது வெற்றியில் சந்தேகப்பட்டு, அந்த அச்சத்தின் காரணமாக எதை மக்கள் முன் பேசுகின்றோhம் என்பதை மறந்து வாயில் வருவதெயல்லாம் பேசி வருவதையும், பிரதேசவாத் தீயினால்; ஊர்;களைச் சுடுவதையும்,  தமது வெற்றி இலக்கை அடைந்து கொள்வதை மாத்திரம் நோக்காகக் கொண்டு  செயற்படுவதையும்  அவதானிக்க முடிகிறது

இவர்கள் மத்தியில்  காணப்படும் அரசியல் அச்சம் ‘பொலிடிகோபோபியா’வின் தாக்கமானது சமூக சிந்தனையையும்,  சமூக ஒற்றுமையையும், சமூகத்தின் எதிர்கால இலக்குகளையும் மறைத்துவிட்டது. அத்தோடு, சுயநலத்தையும், வேற்றுமையையும், பிரதேசவாதத்தையும் வளர்த்துவிட்டதுடன்; வெற்றியையும், இருப்பையும் தக்கவைத்துக்கொள்வதற்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குவதாக நோக்க வேண்டியுள்ளது என்பதே யதார்த்தமாகும்.

Web Design by The Design Lanka