அரசியல் விவகாரங்களுக்கான ஆய்வத்தின் தென்னிலங்கை பணிப்பாளர் சுல்பிக்காரின் திறந்த மடல்! - Sri Lanka Muslim

அரசியல் விவகாரங்களுக்கான ஆய்வத்தின் தென்னிலங்கை பணிப்பாளர் சுல்பிக்காரின் திறந்த மடல்!

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

எம்.எச்.முஸ்தாக் முஹம்மட்

முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தால் சீரழிந்து சிதைக்கப்பட்டு ஒதுக்கித்தள்ளப்படும் மூத்தபோராளிகளுக்கு நியாயம் தேடி அரசியல் விவகாரங்களுக்கான ஆய்வத்தின் தென்னிலங்கை பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சுல்பிக்காரின் திறந்த மடல்!

முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும்! தலைமைகளுக்கும்!
அஸ்ஸலாமு அலைக்கும்!

தெற்கில் பிறந்து தென்காற்றை தொடர்ந்து சுவாசித்துக் கொண்டாலும் பல வருடங்கள் கிழக்குத் தலைமையான மாமனிதர் மர்ஹீம் எம்.எச்.எம்.அஸ்ரஃப்பின் அமைச்சிலும் தாங்கள் துறைமுக அமைச்சராக இருந்த போது தங்களின் அமைச்சில் பணி புரிந்து கிழக்கு முஸ்லிம் இயக்கத்தின் வளர்ச்சி பற்றியும் அவர்களின் இரத்தம் துவைந்து போன மண்ணின் வரலாற்றையும் சுகதாக்களின் பட்டியலையும் நன்கறிந்தவன் என்ற வகையில் இதனை உங்களுக்கு எழுத வேணடும் போல் உள்ளது.

ஆட்சி மாற்றம் கொண்டு வந்த புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்;றிய கலந்துரையாடலும் செயற்ப்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் தனிப்பட்ட குரோத மனப்பான்மைகளாலும் அரசியல் அதிகார மோகத்தில் தொடர்ந்து காலம் கடத்தும் முஸ்லிம் தலைமைகளின் முட்டி மோதல்கள் இன்று முஸ்லிம் காங்கிரஸீக்குள் பரந்து விரிந்து அரசியல் அதிகார வெறுமை நிறைந்த கிழக்கு மண்ணில் மீண்டும் தனிக்கட்சித்தலைமையின் அதிகார மமதையும் மக்களின் இருப்பும் பிரிந்தறிந்து மக்களால் மக்கள் நேரத்துக்கு நேரம் புடம் போடப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

தென்னிலங்கையின் தலைசிறந்த தலைவர்களால் ஆளப்பட்ட கிழக்கு மாகாண மக்கள் தங்களது பிரதேச கலாச்சாரத்தையும் நில புலங்களையும் வாழ்வின் கஸ்டங்களையும் அறிந்து கொள்ள முடியாமல் போன தென்னிலங்கைத் தலைமையிடமிருந்து வேறுபட்டு பிரிந்து உருவாக்கி கட்டிக் காப்பாற்றிய அரசியல் இயக்கத்ததை மாமனிதர் மர்ஹீம் எம்.எச்.எம்.அஸ்ரஃப்பின் மறைவிற்க்குப்பின்னர் காலத்தின் கோலத்தாலும் நம்பிக்கையின் உச்சத்தினாலும் தென்னிலங்கைக்கு கைமாற்றப்பட்ட தலைமையை மீண்டும் கையேற்று வழி நடாத்த கிழக்கு முஸ்லிம்கள் முனைந்து வருகின்றனர் இது ஏன்?

2000 ம் ஆண்டின் பிற்ப்பாடு கிழக்கு முஸ்லிம் தலைமைகள் என அடையாளம் காணப்பட்டவர்கள் திட்டமிட்டு முஸ்லிம் தனித்துவ அரசியல் இயக்கத்திலிருந்து பதவிப்பிசாசுகள் என வசைபாடி புறமொதுக்கப்ட்டனர். ஆதனைத்தொடர்ந்து மூத்தபோராளிகள் புதியவர்களைக் கண்டு விலகிக் கொண்டனர். ஆல்லது புறந்தள்ளப்பட்டனர் இப்போது சொந்தக்காரவன் போல் இருந்த மூத்த போராளியின் தனித்துவ இயக்கத்தினல் அவருக்கு இருந்த சொந்தங்களை சுரண்டி எடுதது அதிகாரத்தை சூட்சுமமாக பறித்தெடுத்து கையாhல் ஆகாதவன் என புத்தம் புதிய கொந்தராத்து அரசியல்வாதிகளைக் கொண்டு புறமொதுக்கும் நாடகம் அரங்கிலேயே முற்றுப்பெறாமல் தொடர்ந்தும் தரையிலேயே இறக்கிவைக்கப்பட்டீருக்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் பணக்காரவர்களினதும் கட்சி விட்டு கட்சி பாயும் மக்கள் செல்வாக்கில்லாத பித்தலாட்டக்காரவர்களையும் அதிகாரத்தில் ஏற்றி அழகு பார்க்கும் முஸ்லிம் காங்கிரஸ் இன்று தனிநபர்களின் பித்தலாட்டத்தினால் பின் தங்கி நிற்கின்றது.

பிரிக்கப்பட்ட வடக்குகிழக்கில் தென் இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் தலைவிதிகளை எழுதிக் கொள்வதற்க்காக வடக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஸாட் பதியுதீனும் தெற்கில் ஜ.தே.கடசி செயலாளர் கபீர்; ஹாசிம் முஸ்லிம்; காங்கிஸ் தலைவர் றவப் ஹக்கீம் போன்றவர்கள் அரசியலமைப்புச் சீர்திருத்த சபையிவ் உள்ள போது கிழக்கு முஸ்லிம்களின் கண்ணீரும் இரத்தமும் அகதி வாழ்வும் கனத்துப்போய் கலங்கி நிற்கும் மக்களை பற்றி யார் பேசுவது? அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஸாட் பதியுதீனா?; ஜ.தே.கடசி செயலாளர் கபீர்; ஹாசிமா? முஸ்லிம்; காங்கிஸ் தலைவர றவப் ஹக்கீமா? இவர்களில் யாருக்குhவது கிழக்கின் புலம்பல் விளங்குமா ?

ஆகவே கிழக்கு முஸ்லிம் தலைமைகளை கருவறுத்து அவர்களின் இயக்கத்தை அபகரித்து விட்ட சொற்பலியை தென் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்ப்படுத்தாமல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதத்தை பாதுகாத்து ஒற்றுமைமப்பட்டுப் போன சமூகமாக உருக்கொண்ட கிழக்கு முஸ்லிம் சமூகத்ததை கருத்து வேறுபாடுகளால் கருவறுத்து விடாது அவர்களளுக்கு சொந்தமான அதிகாரக் கதிரைகளை வழங்க வேண்டும் எனவும் முஸ்லிம்; காங்கிரஸீக்குள் ஏற்ப்பட்டிருக்கும் உள்ளக முரண்பாடுகள் சீரமைக்கப்பட்டு ஹசனலி போன்ற மூத்த போராளிகளின் அசையா நம்பிக்கையில் காலுன்றி நிற்கும் தனித்துவ இயக்கத்தை அவர்களிடமிருந்து பறித்து அவர்களை முஸ்லிம் சமூகத்தில் கோமாளிகள் ஆக்கும் நயவஞ்சகத்தை புரிந்து அப் பலியை தென்னிலங்கை முஸ்லிம்களைக் கொண்டு சுமக்க வைக்க வேண்டாம் என தலைவரிடம்; வேண்டிக் கொள்கின்றேன்.

Web Design by Srilanka Muslims Web Team