அரசு அலுவலகங்களில் யாகூ-ஜிமெயில் பயன்படுத்த தடை: மத்திய அரசு அதிரடி - Sri Lanka Muslim

அரசு அலுவலகங்களில் யாகூ-ஜிமெயில் பயன்படுத்த தடை: மத்திய அரசு அதிரடி

Contributors

அரசு அலுவலகங்களில் பாதுகாக்கப்படும் தரவு சேவைகள் சைபர் கிரைம் குற்றங்களில் சிக்குவதை முற்றிலும் தடை செய்யும் நோக்கில்  யாகூ, ஜிமெயில் வலைத்தளங்களின் உபயோகத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அரசாங்கம் இனி தனது உத்தியோகபூர்வ தகவல்களுக்கு கொள்கை தேசிய தகவல் மையத்தின்(நிக்) இணையதளத் தொடர்புகளையே பயன்படுத்த முடிவு செய்துள்ளது.அரசாங்க அலுவலகங்கள் இந்த இணையதளத் தொடர்பை உபயோகப்படுத்துவதை அரசு கட்டாயமாக்க எண்ணியுள்ளது. இதன்மூலம் 5 முதல் 6 லட்சம் அரசு ஊழியர்கள் நிக் தகவல் தொடர்பை பயன்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு செய்வதன்மூலம், உத்தியோகபூர்வ ஆதாரங்களின்படி அரசாங்கத்தின் தகவல் பதிவுகள் பெருமளவில் பாதுகாக்கப்பட முடியும் என்று அரசு கருதுகின்றது.

இந்திய அரசாங்கத்தின் கொள்கை என அழைக்கப்படும் இந்தத் திட்டம் கிட்டத்தட்ட தயார் நிலையில் உள்ளது. மற்ற அமைச்சரவைகளின் கருத்துகளும் இதுகுறித்து சேகரிக்கப்பட்டு வருகின்றன. வரும் டிசம்பர் மாத மத்தியிலிருந்து இறுதிக்குள் இந்த செயல்பாடுகள் தொடங்கக்கூடும் என்று மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்பத் தகவல்துறையின் செயலாளரான சத்யநாராயணா சிஐஐ உச்சி மாநாட்டின்போது நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த உட்கட்டமைப்பு வசதிகளுக்காக உடனடியாக 4 முதல் 5 கோடி ரூபாய் வரை தேவைப்படுவதாகவும் அவர் கூறினார். ஆயினும், இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தும்போது இதன் முதலீடு 50 முதல் 100 கோடி ரூபாய் வரை இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி இத்தகைய தரவுத் தகவல்கள் கிளவுட் பிளாட்பாரம் எனப்படும் தொகுப்பில் சேமித்து வைக்கப்படும். அதனால், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தங்களுடைய துறை குறித்த தகவல் தொகுப்புகளை எளிதில் கையாள முடியும் என்றும் சத்யநாராயணா விளக்கினார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜன்சி மற்றும் மத்திய புலனாய்வுத்துறை ஏஜென்சியின் முன்னாள் தொழில்நுட்ப ஒப்பந்ததாரரான எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்கா மற்ற நாடுகளைக் கண்காணிப்பதை ஆதாரங்களுடன் விளக்கியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Web Design by Srilanka Muslims Web Team