அரசு போடுகின்ற அனைத்து தாளங்களுக்கும் எம்மால் ஆட முடியாது - ரவூப் ஹக்கீம் - Sri Lanka Muslim

அரசு போடுகின்ற அனைத்து தாளங்களுக்கும் எம்மால் ஆட முடியாது – ரவூப் ஹக்கீம்

Contributors

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஐக்­கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடு­தலை முன்­னணி ஆகிய கட்­சிகள் இல்­லாத தெரி­வுக்­கு­ழுவில் என்ன பிர­யோ­சனம் உள்­ளது? என்று வின­வு­கின்றோம். பாரா­ளு­மன்ற பெரும்­பான்மை இருக்­கின்­றது என்­ப­தற்­காக தாங்கள் நினைத்த போக்கில் அர­சியல் தீர்­வு­களை திணிக்க முடி­யாது என்று சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் நீதி­ய­மைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

வட மாகாண சபையில் இழு­பறி நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இது ஆரோக்­கி­ய­மான விட­ய­மாக இலலை. எனவே இரண்டு தரப்­புக்­க­ளிலும் விட்­டுக்­கொ­டுப்­புக்­களை செய்து வட மாகாண நிர்­வா­கத்தை சுமு­க­மாக கொண்டு செல்ல ஒரு முயற்சி செய்­யப்­ப­ட­வேண்டும் என்­ப­தனை வலி­யு­றுத்­து­கின்றோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்கம் கூறு­கின்ற அனைத்து தாளங்­க­ளுக்கும் நாங்கள் ஆடிக்­கொண்­டி­ருக்க முடி­யாது. எனது கொள்­கை­க­ளையும் விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது என்றும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.

நாட்டின் தற்­போ­தைய அர­சியல் நிலைமை தொடர்பில் கொழும்பு நாளிதழுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்,

அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான இணக்­கப்­பாட்டை எட்­டிக்­கொள்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் நம்­ப­கத்­தன்மை என்­பதே கிடை­யாது. அர­சாங்­கத்தின் அமைச்­ச­ராக இருந்­து­கொண்டே இதனை நான் கூறு­கின்றேன். நம்­ப­கத்­தன்மை மற்றும் எந்­த­வி­த­மான தார்­மீ­கமும் இல்­லாத ஒரு தெரி­வுக்­கு­ழு­வா­கவே இது இருக்­கின்­றது.

அது மட்­டு­மன்றி அனைத்து வித­மான பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­க­ளையும் மீறி இந்த தெரி­வுக்­குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­களின் பிர­காரம் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­கின்ற அனைத்துக் கட்­சி­களும் அங்கம் வகிக்­கக்­கூ­டிய வகை­யி­லேயே இந்தத் தெரி­வுக்­குழு நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­க­வேண்டும்.

விசே­ட­மாக ஆளும் கட்­சியில் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு அடுத்­த­ப­டி­யாக கூடு­த­லான ஆச­னங்­க­ளைக்­கொண்­டுள்ள கட்­சி­யாக முஸ்லிம் காங்­கிரஸ் உள்­ளது. அத­னையும் உதா­சீனம் செய்­து­விட்டு எமக்கு இடம் வழங்­க­வில்­லை­யாயின் அந்தத் தெரி­வுக்­கு­ழுவில் நம்­ப­கத்­தன்மை இருப்­ப­தாக கூற முடி­யாது.

எனவே அந்த பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் எடுக்­கப்­ப­டு­கின்ற எந்­த­வொரு தீர்­மா­னத்­துக்கும் நாங்கள் ஆத­ரவு வழங்­கு­வதில் சிக்கல் நிலை தோன்றும். எங்­களை சேர்க்­காத ஒரு தெரி­வுக்­கு­ழு­வுக்கு நாங்கள் ஆத­ரவு வழங்­க­வேண்­டுமா என்ற கேள்வி இந்த இடத்தில் எழு­கின்­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் நாங்­களும் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் இடம்­பெ­ற­வேண்­டி­யது அவ­சியம் என்­ப­தனை நாங்கள் வலி­யு­றுத்­து­கின்றோம். அத­னால்தான் நான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு அழைப்பு விடுத்தேன்.

இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்தில் தீவி­ர­மான முயற்சி எடுக்­கப்­ப­ட­வேண்டும். முழுப் பூச­ணிக்­காயை சோற்றில் போட்டு மறைக்கும் வகையில் பேசிக்­கொண்­டி­ருக்க முடி­யாது.
அதற்­கா­கவே பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தங்­களை எதிர்க்­கட்­சி­களின் பங்­க­ளிப்பு இன்றி செய்ய முயற்­சிப்­பது தார்­மீகம் அல்ல. அதற்கு நாங்கள் உடந்­தை­யாக இருக்க முடி­யாது. குறிப்­பாக முஸ்லிம் காங்­கி­ரஸை தெரி­வுக்­கு­ழுவில் சேர்த்­தி­ருக்­க­வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஐக்­கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடு­தலை முன்­னணி இல்­லாத தெரி­வுக்­கு­ழுவில் என்ன பிர­யோ­ஜனம் உள்­ளது என்று கேட்­கின்றேன். பாரா­ளு­மன்ற பெரும்­பான்மை இருக்­கின்­றது என்­ப­தற்­காக தாங்கள் நினைத்த போக்கில் நாட்டில் அர­சியல் தீர்­வு­களை திணிக்க முடி­யாது.

சில­நேரம் 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு ஆத­ர­வாக நான் கடந்த காலங்­களில் குரல் கொடுத்­த­மையின் கார­ண­மாக எங்­களை தெரி­வுக்­கு­ழுவில் புறக்­க­ணித்­தி­ருக்­கலாம். ஆனால் அது எனது அர­சியல் சுதந்­திரம். அர­சாங்கம் கூறு­கின்ற அனைத்து தாளங்களுக்கும் நாங்கள் ஆடிக்கொண்டிருக்க முடியாது. எனது கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது.

இது இவ்வாறு இருக்க தற்போது வட மாகாண சபையில் ஒரு இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது. இது ஆரோக்கியமான விடயமாக இல்லை. எனவே இரண்டு தரப்புக்களிலும் விட்டுக்கொடுப்புக்களை செய்து வட மாகாண நிர்வாகத்தை சுமுகமாக கொண்டு செல்ல ஒரு முயற்சி செய்யப்படவேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம் என்றார்.(tc)

Web Design by Srilanka Muslims Web Team