அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க கோரி நெல்லையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் - Sri Lanka Muslim

அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க கோரி நெல்லையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

Contributors

qout70

அரசு வேலைவாய்ப்பில் மத்திய அரசு 10 சதவீதமும், மாநில அரசு 7 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று நெல்லையில் இன்று சிறைநிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக் கப்பட்டிருந்தது.

அதன்படி, நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் போராட்டம் நடந்தது. இதில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கேரளாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் குடும்பத்துடன் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.

ஆயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

 

 

Web Design by Srilanka Muslims Web Team