அரச உயரதிகாரிகள் சேவை நலன் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு - Sri Lanka Muslim

அரச உயரதிகாரிகள் சேவை நலன் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

Contributors
author image

சலீம் றமீஸ்

பொது மக்களுக்கு  சேவையாற்றும் அரசியல்வாதிகள், அரச உயரதிகாரிகள் சேவை நலன் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும், உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசண அமைச்சர்; எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் முயற்சியினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளித்தல், அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்தல் தொடர்பான கூட்டமும் அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கத்தில் இடம் பெற்றது.

 

விவசாய, நீர்ப்பாசன அமைப்புக்களின் பிரதிநிதியும், அட்டாளைச்சேனை விவசாய, நீர்ப்பாசன அமைப்பின் தலைவருமான ஐ.எல்.தௌபீக்(DPD) தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்து சிறப்பித்தார்.

 

மக்கள் சேவையாளர்களான உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர்(மத்திய) பொறியியலாளர் நிமல் சிறிவர்த்தன, முன்னாள் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் சமன் வீரசிங்க,

 

 மொணராகல மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.எல்.எம்.அலியார், அம்பாரை நீர்ப்பாசனப் பிரதம பொறியியலாளர் ஏ.கே.ஜப்பார், அக்கரைப்பற்று நீர்ப்பாசனப் பொறியியலாளர் எம்.ஐ.எம்.இஸட்.ஹனிபா, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், பொறியியல் உதவியாளர் மூஸாலெப்பை , அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் ஆகியோர் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

 

இதில் அரச திணைக்கள உயரதிகாரிகளும், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை விவசாய, நீர்ப்பாசன குழுக்களின் பிரதிநிதிகளும், முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 

12

 

13

 

14

 

15

 

16

 

17

 

18

 

19

Web Design by Srilanka Muslims Web Team