அரச ஊழியர்களுக்கான முற்பண கொடுப்பனவை பெப்ரவரியில் வழங்க நடவடிக்கை - Sri Lanka Muslim

அரச ஊழியர்களுக்கான முற்பண கொடுப்பனவை பெப்ரவரியில் வழங்க நடவடிக்கை

Contributors

அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா விசேட முற்பணக் கொடுப்பனவுகளை வழங்குமாறு சகல திணைக்களத் தலைவர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன் இதற்கான சுற்று நிருபம் சகல திணைக்களங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னதாக இந்த கொடுப்பனவுகள் யாவும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. வருட ஆரம்பத்தில் அரச ஊழியர்களுக்கு ஏற்படும் பிள்ளைகளின் கல்விச் செலவு மற்றும் அத்தியாவசிய செலவுகளை ஈடு செய்யும் விதத்தில் இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு வழங்கப்படுகின்ற விசேட கொடுப்பனவானது மாதாந்த சம்பளத்திலிருந்து தவணைக்கட்டண அடிப்படையில் மீள அறவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(vk)

Web Design by Srilanka Muslims Web Team