அரச பணத்திற்காக 5000 கலப்புத் திருமணம்! இந்தியாவில் அதிசயம் - Sri Lanka Muslim

அரச பணத்திற்காக 5000 கலப்புத் திருமணம்! இந்தியாவில் அதிசயம்

Contributors

அரசாங்கம் தரும் 50 ஆயிரம் பணத்திற்காக 5000க்கும் மேற்பட்ட பெண்களை கலப்புத் திருமணம் புரிந்த 47 வயது விஜய் கறுப்பையா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய ராஜ்நண்டகன் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் கறுப்பையாஅரசாங்கம் தரும் பண உதவிகளைப் பெறுவதற்காகவே இவ்வாறு திருமணம் செய்ததாகத் தெரிவித்துள்ளார். எஸ்சி, எஸ்டி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களை கலப்பு திருமணம் புரிந்து கொண்டால் அரசாங்கம் ரூ 50 ஆயிரத்தை திருமண உதவித் தொகையாக வழங்கி வருகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்ட விஜய், பண ஆசை காட்டி பல பழங்குடி இன பெண்களை திருமணம் செய்துள்ளார்.

கிடைக்கும் பணத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ரூ25 ஆயிரமும், தனக்கு ரூ 25 ஆயிரமும் என பங்கிட்டு கொண்டுள்ளனர். திருமணங்களுக்கென போலிஆவணங்களைப்பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team