அரச வைத்திய அதிகாரிகளுக்கிடையில் முறுகல் - வருடாந்த தேர்தலை நடாத்த தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை நாடினர்..! - Sri Lanka Muslim

அரச வைத்திய அதிகாரிகளுக்கிடையில் முறுகல் – வருடாந்த தேர்தலை நடாத்த தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை நாடினர்..!

Contributors

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த தேர்தலை எதிர்வரும் 26 ஆம் திகதி நடத்த தடைவிதித்து, உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர்கள் சிலர் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தேர்தல் குழு தலைவர் வைத்தியர் மைத்ரி சந்ரரத்ன உள்ளிட்ட 10 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அதேநேரம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தற்போதைய செயலாளருடன் அந்த பதவிக்காக போட்டியிடும் பிரியந்த அத்தபத்து கொழும்பு மாவட்ட மேல்நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளார்.

தேர்தல் குழு தலைவரினால் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்காக அறிவிக்கப்பட்ட வாக்கெடுப்பு அற்ற அந்த சங்கத்தின் நியமனங்களை வலுவிலக்கச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team