அரபு நாடுகளுக்கு செல்பவர்களுக்கு அரபு மொழி பயிற்சி! - Sri Lanka Muslim

அரபு நாடுகளுக்கு செல்பவர்களுக்கு அரபு மொழி பயிற்சி!

Contributors

அரபு லீக்கிற்குச் சொந்தமான 9 நாடுகளை உள்ளடக்கிய அரபு கவுன்சிலின் நான்கு உறுப்பினர்களுக்கும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கல்வி அமைச்சில் நடைபெற்றது.

இந்நாட்டில் அரபு கவுன்சிலின் தலைவர் பாலஸ்தீனத் தூதுவர் கலாநிதி சுஹைர் எம். எச். தார் ஸைத் (H. E. Dr. Zuhair M. H. Dar Zaid) என்பவருடன் சவூதி அரேபியா, ஈராக் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் மூன்று உயர்மட்ட இராஜதந்திரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

உயர்கல்வி உதவித்தொகை பரிமாற்ற திட்டங்கள் குறித்தும், அரபு நாடுகளுக்குச் செல்லும் இந்நாட்டின் திறமையான மற்றும் திறமையற்ற தொழிலாளர்களுக்கு அரபுக் கலாசாரம் மற்றும் மொழி குறித்த போதிய முன் பயிற்சி வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team