அரிசிக்கு தட்டுப்பாடு என்கின்றனர் நுகர்வோர் – போதுமான கையிருப்பு உள்ளது என்கின்றது அரசு..! - Sri Lanka Muslim

அரிசிக்கு தட்டுப்பாடு என்கின்றனர் நுகர்வோர் – போதுமான கையிருப்பு உள்ளது என்கின்றது அரசு..!

Contributors

அரசாங்கம் அத்தியாவசியப்பொருட்கள் தொடர்பில் அவசரகால விதிமுறைகைள அறிவித்துள்ள போதிலும் கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் அரிசிக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். பல்பொருள்அங்காடிகளில் கீரிசம்பா சம்பா போன்றவற்றிற்கு தட்டுப்பாடு காணப்படுவதாக சமூக ஊடகங்களில் நுகர்வோர் பதிவிட்டுள்ளனர். சிகப்பு நாடு போன்றவை போதியளவில் காணப்படுகின்றன என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இறக்குமதி செய்யப்பட்ட பாஸ்மதி அரிசி தாராளமாக காணப்படுவதாகவும் ஆனால் உள்ளுர் பாஸ்மதிக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை என தெரிவித்துள்ள வர்த்தக அமைச்சின் செயலாளர் போதுமான அரிசி சந்தையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

நெல்சந்தைப்படுத்தும் சபை நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது என தெரிவித்துள்ள அவர் அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லை விவசாயிகளிடமிருந்து அதிக விலைக்கு கொள்வனவு செய்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


தற்போதைக்கு அரிசியும் நெல்லும் தாரளாமாக கிடைக்கின்றன என தெரிவித்துள்ள அவர் ஆனால் நெல்சந்தைப்படுத்தும் சபை நெல்லை கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளதால் நெல் ஆலை உரிமையாளர்கள் அதிகவிலைக்கு நெல்லை கொள்வனவு செய்கின்றனர் இது உற்பத்தி செலவை அதிகரிக்கின்றது பின்னர் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர் – நுகர்வோர் அதிகார சபை சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team