அரிசி இடிக்கச் சென்றுவந்த தங்கையை காட்டுக்குள் வைத்து வல்லுறவு செய்த அண்ணன்மார்! - Sri Lanka Muslim

அரிசி இடிக்கச் சென்றுவந்த தங்கையை காட்டுக்குள் வைத்து வல்லுறவு செய்த அண்ணன்மார்!

Contributors

உறவுக்கார சகோதரர்கள் இருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 15 வயது பாடசாலை மாணவி ஆபத்தான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிலாபம் – அளுத்வெவ பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (10) பகல் அரிசி இடிக்கச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை இடையில் வழிமறித்த சகோதரர்கள், பலாத்காரமாக அவரை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றையவர் தப்பிச் சென்றுள்ளார்.

சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(ad)

Web Design by Srilanka Muslims Web Team