அரிசி இறக்குமதியை இடைநிறுத்த திட்டம்! - Sri Lanka Muslim
Contributors

நாட்டில் போதியளவு அரிசி இருப்பில் கிடப்பதால், அரிசி இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான கோரிக்கையை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று மாலை (01) அமைச்சரவையிடம் முன்வைக்க தீர்மானித்துள்ளார்.

பெரும் போகத்திற்கான நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்க அனுமதியின் அடிப்படையில் போதியளவு அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கைக்கான அரிசி இறக்குமதியை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை இடைநிறுத்துவதற்கான யோசனையை இன்று (01) அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team