“அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” கருத்திட்டத்தில் அந் நூர் வித்தியாலயம் கல்வி அமைச்சினால் உள்வாங்கள் » Sri Lanka Muslim

“அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” கருத்திட்டத்தில் அந் நூர் வித்தியாலயம் கல்வி அமைச்சினால் உள்வாங்கள்

annoor

Contributors
author image

பைஷல் இஸ்மாயில்

“இறந்த காலத்திற்கு ஒரு திறப்பு எதிர்காலத்திற்கு ஒரு பாலம்” என்ற எண்ணக்கருவின் கீழ் “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” கருத்திட்டத்தில் அட்டாளைச்சேனை அந் நூர் வித்தியாலயம் உள்ளடங்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக 375000.00 ரூபா கல்வி அமைச்சினால் கிடைக்கபெற்றுள்ளதாக குறித்த வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எம்.மிஸ்பர் நேற்று (06) தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலைகளிலுள்ள நூல் நிலையப் புத்தகங்களின் எண்ணிக்கையினை மாணவ நூல் வீகிதாசாரத்துக்கு ஏற்ப சர்வதேச மட்டத்துக்கு உயர்த்தும் ஐந்தாண்டுத் திட்டத்துக்கு அமைய 2017 ஆம் ஆண்டுக்கான பாடசாலை நூல் நிலைய நூல்களை வழங்குவதற்கான நிகழ்ச்சித் திட்டத்திற்கு உள்ளடக்கப்பட்டு பாடசாலைகளுக்கான நூல் நிலையத்திற்கு நூல்களை விலைக்கு வாங்குவதற்காகவே இந்த  நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கூறினார்.  

பாடசாலை நூல் நிலைய நூல்களின் எண்ணிக்கையை மேம்படுத்துவதற்காகவும், 13 வருட சான்றுப்படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித் திட்டத்தின் ஒழுங்கு படுத்தும் கருத்திட்டம் மற்றும் வழிகாட்டலுக்கும், ஆலோசனைகளுக்குமான அலகிற்கு 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், புத்தக அலுமாரிகளுக்காக 25 ஆயிரம் ரூபாவும் என்ற அடிப்படையிலேயே இந்த நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர்  மேலும் தெரிவித்தார். 

Web Design by The Design Lanka