அலப்போவும் அழுகையும் » Sri Lanka Muslim

அலப்போவும் அழுகையும்

alappo

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


தொழப் போகாமல்
துஆ கேட்காமல்
அலப்போக்கு போஸ்ட் போட்டு
ஆவது ஒன்றுமில்லை

பஸாரில் ஏமாற்றி
பாவங்கள் புரிபவர்கள்
பஷ்ஷாருக்கு ஏசுவதால்
பயனேதும் உண்டாமோ?

உரிய உரிமைகளை
உறவுகளிடம் பறித்தவர்கள்
சிரிய மக்களுக்காய்
சீறுவதில் என்ன பயன்?

வாயால் பேசும் மார்க்கம்
வாழ்க்கையில் இல்லாதோர்கள்
தீயோர்க்கு எதிராய் ஒன்றாய்
திரளுவதால் நலன் உண்டா?

ஊரில் சேவை செய்ய
ஒரு சதமும் கொடுக்காதவர்கள்
போரில் இழந்தவர்க்கு
பொருளதவி நல்குவாரா?

இடிபாடுக்குள் சிக்குண்ட
இளசுகளைக் காணும் போது
வடிகிற கண்ணீர் எங்கள்
வாழ்க்கையையும் மாற்றட்டும்.

அந்த மக்களுக்காய்
ஆண்டவனிடம் ஏந்தும் முன்
சொந்தத் தவறுகளில்
சுத்தமாகி வெளிவருவோம்.

சாமத்தில் எழுவோம்
ஷாமுக்காய் அழுவோம்
நாமத்தில் மட்டுமல்ல
நடைமுறையிலும் முஸ்லிமாவோம்

Web Design by The Design Lanka