அலவி மௌலாண பௌத்த மதத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளாராம் : BBS - Sri Lanka Muslim

அலவி மௌலாண பௌத்த மதத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளாராம் : BBS

Contributors

மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவுக்கு எதிராக பொது பலசேனா இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.குர்பான் கடமையை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவித்ததன் மூலம் ஜனாதிபதி அவர்களின் முகவரும் ஆளுநருமான அலவி மௌலாண பௌத்த மதத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாக பொது பலசேனா இயக்கத்தின் தேசிய தலைமையகத்தின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் 2ம் திகதி மேல் மாகாண ஆளுனரினால் கொலொன்னாவ நகர சபைக்கு எழுதிய கடிதத்தில் குர்பான் (மாடு அறுப்பு) கடமையை புண்ணிய கடமை என்பதால் அதை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு எழுதியதன் மூலம் அலவி மௌலானா பௌத்த மதத்திற்கு எதிராக முழு அரச பலத்தையும் உபயோகித்துள்ளதன் காரணத்தினால் அரசியல் யாப்பில் இரண்டாவது பந்தியில் குறிப்பிட்டுள்ள பௌத்த சாசனத்தின் பாதுகாப்பிட்கும் முன்னுரிமைக்கும் ஒரு சவாலாக நடந்துள்ளதாக இந்த முறைபப் பாட்டில் தெரிவித்துள்ளது.

அரசியல் யாப்பில் இரண்டாவது பந்தியில் குறிப்பிட்டுள்ள பௌத்த சாசனத்தின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியும் புத்த மதத்தை தேசிய மதமாக மாற்ற வேண்டியும் மேல் மாகாண ஆளுநரின் இச்செயலால் தம் மதத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாவும் சாசனத்துக்கு எதிராக நடக்கும் இவ்வாறான செயல்கலை நிறுத்த கட்டளை பிறப்பிக்குமாறு அதில் மேலும் வேண்டியுள்ளார்-TC

Web Design by Srilanka Muslims Web Team