அலி சப்ரி இன்று அமெரிக்கா பயணம்! - Sri Lanka Muslim
Contributors

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் அந்தனி பிளிங்கனின் அழைப்பின் பேரில் இன்று (29) அதிகாலை அமெரிக்கா பயணமானார்.

இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சின் மூன்று சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்துக்கொண்டுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் விஜயத்தின் போது, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன், இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விஜயத்தின் போது, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் மற்றும் பல உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team