அலுத்கமை கலவரத்தின் சூத்திரதாரிகள் நல்லாட்சி அரசாங்கத்திலேயே உள்ளனர் - ரொஷான் ரனசிங்க MP » Sri Lanka Muslim

அலுத்கமை கலவரத்தின் சூத்திரதாரிகள் நல்லாட்சி அரசாங்கத்திலேயே உள்ளனர் – ரொஷான் ரனசிங்க MP

roshan

Contributors
author image

ஊடகப்பிரிவு

அலுத்கமை கலவரத்திற்கு முடியுமானால் விசாரணை கமிஷன் வைக்கவும் ; கூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க பகிரங்க சவால் ..

அலுத்கமை கலவரத்திற்கு முடியுமானால் விசாரணை கமிஷன் வைக்ககுமாறு கூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

இன்று இரவு இடம்பெற்ற தெரன தொலைக்கட்சி அரசியல் நிகழ்ச்சியிலேயே இந்த சவாலை கூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க முன்வைத்துள்ளார்.

இம்முறை இடம்பெற்ற தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தாக கூறிய அவர் அலுத்கமைக்கு தாக்குதல் மேற்கொண்ட சூத்திரதாரிகள் இந்த அரசாங்கத்திலேயே இருப்பதாகவும் முடியுமானால் விசாரணை கமிஷன் ஒன்றை வைக்குமாறு தான் சவால் விடுவதாகவும் குறிப்பிட்டார்.

முஸ்லிம் மக்கள் தற்போது தெளிவடைந்துள்ளதாக கூறிய அவர் எதிர்காலத்தில் அவர்களை முட்டாள்களாக்கி வாக்கு எடுக்க முடியாது என குறிப்பிட்டார்.

Web Design by The Design Lanka