அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் சீருடை மற்றும் கழக கொடி அறிமுக விழா » Sri Lanka Muslim

அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் சீருடை மற்றும் கழக கொடி அறிமுக விழா

naja.jpeg2

Contributors
author image

M.J.M.சஜீத்

அட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் சீருடை மற்றும் கழக கொடி அறிமுக விழா நேற்று முன்தினம் (28) அட்டாளைச்சேனை Beach Gust இல் நடைபெற்றது.

அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.இத்ரீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் பிரதம அதிதியாகவும், அம்பாரை மாவட்ட மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் எஸ்.எல்.தாஜூதீன், இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.ரீ.எம். ஹாறூன், கிராம உத்தியோகத்தர் எம்.ஐ.அஸ்வர், கோணாவத்தை ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம்.எம்.அமீன் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

இதன்போது பிரதேச செயலாளரினால் அல்-நஜா விளையாட்டுக்கழகத்தின் சீருடை மற்றும் கழகக் கொடி என்பன அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகள் மற்றும் சிரேஸ்ட வீரர்களுக்கு கழகத்தின் பெயர் பொறிக்கப்பட்ட சீருடைகளும் வழங்கி வைக்கப்பட்டது.

அல்-நஜா விளையாட்டுக்கழகம் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கல்வி, கலாசார மற்றும் பல்வேறு சமூகப்பணிகளிலும் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.naja naja.jpeg2 naja.jpeg2.jpeg3

Web Design by The Design Lanka