அல்-மனார் நிறுவனம்; றமழானில் நடாத்திய 2014- றமழான் விஷேட அறிவியல் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு விழா-படங்கள் - Sri Lanka Muslim

அல்-மனார் நிறுவனம்; றமழானில் நடாத்திய 2014- றமழான் விஷேட அறிவியல் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு விழா-படங்கள்

Contributors

 

-பழுலுல்லாஹ் பர்ஹான்

 

றமழான் மாதத்தில் ஒவ்வொருவரும் குர்ஆனோடும் , நபி வழியோடும் தொடர்புகளை அதிகரிக்க வேண்டுமென்பதற்காக காத்தான்குடி அல்-மனார் நிறுவனம்; றமழானில் நடாத்திய 2014- றமழான் விஷேட அறிவியல் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று 24-08-2014 ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி அல் மனார் அர்ராஷித் மண்டபத்தில் இடம்பெற்றது.

 

அல்-மனார் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எச்.ஏ.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற றமழான் விஷேட அறிவியல் போட்டி பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி (மஜீதி) கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் உதவித் தலைவர் எம்.ஏ.காலிதீன் (பலாஹி)யும் விஷேட அதிதியாக அல்-மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி)யும் கலந்து கொண்டனர்.

 

இதன் போது இப் போட்டியில் வெற்றியீட்டி சிறந்த புள்ளிகளை பெற்றுள்ள எம்.ஜெ .அப்துல்லாஹ் எனும் முதலாவது வெற்றியாளருக்கு 40000 ரூபாய் பெறுமதியான சோபா செட்டும், எம்.ஏ.பாத்திமா அசீறா எனும் இரண்டாவது வெற்றியாளருக்கு 20000 ரூபாய் பெறுமதியான சலவை இயந்திரமும்,ஏ.கே.எம்.ஹாபிழ் எனும் மூன்றாவது வெற்றியாளருக்கு 12000 ரூபாய் பெறுமதியான சாப்பாட்டு மேசை செட்டும் ,எச்.சஜாத் அஹமட் எனும் நாலாவது வெற்றியாளருக்கு 5000 ரூபாய் பெறுமதியான ஒரு சிறிய மேசையுடன் ஆறு கதிரைகளும் ,பத்து பேருக்கு ஆறுதல் பரிசாக 3000 ரூபாய் பெறுமதியான பரிசும் ,இரண்டாம் நிலை ஆறுதல் பரிசாக இரண்டு கதிரைகள் இரண்டு பேருக்கும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

 

இங்கு விஷேட உரையை வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி (மஜீதி) நிகழ்த்தினார்.

 

இந்நிகழ்வில் அல்-மனார் நிறுவனத்தின் தஃவாப் பிரிவு பொறுப்பாளர்களான அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.மன்சூர் (மதனி),அஷ்ஷெய்க் எஸ்.எம்.பி.எம்.அன்ஸார் (மதனி) உட்பட உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள், அல்-மனார் நிறுவன நிர்வாகிகள் ,அறிவியல் போட்டியில் வெற்றியீட்டியவர்களின் குடும்பத்தினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

RAN1

 

RAN1.jpg2

 

RAN1.jpg2.jpg3

 

RAN1.jpg2.jpg3.jpg4

 

RAN1.jpg2.jpg3.jpg4.jpg5

 

RAN1.jpg2.jpg3.jpg4.jpg8

 

RAN1.jpg2.jpg3.jpg4.jpg12

 

RAN1.jpg2.jpg3.jpg4.jpg13.

 

RAN1.jpg2.jpg3.jpg6

 

RAN1.jpg2.jpg3.jpg6.jpg7

 

RAN1.jpg2.jpg3.jpg9

 

RAN1.jpg2.jpg15

Web Design by Srilanka Muslims Web Team