அழகுராணியுடன் அனுராதபுர சிறைக்குள் அத்துமீறிய இராஜாங்க அமைச்சர் - கொலை மிரட்டலும் விடுப்பு - கைதுசெய்ய வலியுறுத்து..! - Sri Lanka Muslim

அழகுராணியுடன் அனுராதபுர சிறைக்குள் அத்துமீறிய இராஜாங்க அமைச்சர் – கொலை மிரட்டலும் விடுப்பு – கைதுசெய்ய வலியுறுத்து..!

Contributors

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அங்கு பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன், சிறைச்சாலைக்குள் தன்னை அனுமதிக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளை மிரட்டியுள்ளார்.

எனினும், சிறைச்சாலைக்குள் அவர் சென்றாரா? இல்லையா? என்பது தொடர்பிலான தகவல்கள் வெளியாகவில்லை.

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் மற்றும் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது நண்பர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) இவ்வாறு அட்டகாசம் புரிந்துள்ளார்.

இவரது செயற்பாடுகளை கடுமையாக கண்டித்துள்ள சமூக அமைப்புகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரை உடனடியாக கைது செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.

மதுபோதையிலிருந்த அவர், தனது நண்பர்கள் சகிதம் சிறைச்சாலைக்கு ஏன்? சென்றார் என்பது தொடர்பிலான விவரங்கள் வெளியாகவில்லை.

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சுட்டுக்கொல்வேன் என சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அச்சுறுத்தியுள்ளார் என யாழ்.மாவட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team